பாதிரியாரின் பாலியல் லீலை.. தாய், மகள், மருமகள்.. ஒரே குடும்பத்துக்கு டார்ச்சர் : பகீர் தகவல்!!

Author: Udayachandran RadhaKrishnan
22 March 2023, 4:41 pm

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே சூழால் குடயால் விளை பகுதியைச் சேர்ந்தவர் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ.

இவர் இளம்பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது. பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ பெண்களிடம் ஆபாசமாக சாட்டிங் செய்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் பேச்சிபாறை பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் பாதிரியார் தன்னை பாலியல் ரீதியாக வாட்ஸ்-அப்பில் சாட்டிங் செய்து தொந்தரவு செய்வதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ தலைமறைவானார். பாதிரியாரை பிடிக்க ஏ.டி.எஸ்.பி. ராஜேந்திரன் மேற்பார்வையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பெனடிக்ட் ஆன்றோவை நாகர்கோவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். ஏ.டி.எஸ்.பி. ராஜேந்திரன் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் வசந்தி ஆகியோர் அவரிடம் விசாரித்தனர்.

போலீசாரின் விசாரணைக்கு எந்த ஒரு தயக்கமும் இன்றி பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ பதில் அளித்தார். லேப்-டாப்பில் உள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் குறித்த கேள்விகளை போலீசார் கேட்டனர்.

தன்னுடன் புகைப்படத்தில் நெருக்கமாக இருக்கும் பெண் தனது முன்னாள் காதலி என்றும் பாதிரியார் என்பதால் அவரை திருமணம் செய்ய முடியவில்லை. இருவரும் விருப்பப்பட்டு பிரிந்து விட்டதாகவும் கூறினார்.

மேலும் ஆபாச சாட்டிங் குறித்த விவரங்களையும் போலீசார் கேட்டனர். ஒரே குடும்பத்தில் தாய், மகள், மருமகள் என 3 பேரிடம் பாதிரியார் சேட்டிங்கில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது.

இது தொடர்பான விபரங்களையும் சைபர் கிரைம் போலீசார் கேட்டறிந்தனர். அதற்கும் எந்த ஒரு தயக்கம் இன்றி பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ பதில் அளித்தார். போலீசாரின் அனைத்து கேள்விகளுக்கும் உடனுக்குடன் பதில் அளித்தார். சுமார் 15 நிமிடத்தில் போலீசாரின் கேள்விகள் அனைத்திற்கும் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ பதிலளித்து முடித்தார்.

இதைத்தொடர்ந்து போலீசார், பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை நீதிபதி வீட்டில் ஆஜர்ப்படுத்தி நாகர்கோவில் ஜெயிலில் அடைத்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக பாதிரியார் கூறிய தகவல்களை வைத்து போலீசார் மேல் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் பாதிரியாருடன் நெருக்கமாக இருந்த பெண்ணிடமும் போலீசார் சில தகவல்களை கேட்டறிந்தனர்.

அவரும் அதற்கு உரிய பதில் அளித்தார். சமூக வலைதளங்களில் பரவும் தனது படங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாரிடம் அவர் கோரிக்கை வைத்தார்.

போலீசார் இது தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதற்கிடையில் பாதிரியாரின் லேப்-டாப் மற்றும் செல்போனில் இருந்த ஆபாச படங்கள் மற்றும் சாட்டிங்கை வெளியிட்டவர்கள் குறித்த விவரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.

ஏற்கனவே பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ கொடுத்த புகாரின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொருவர் தலைமறைவாகி உள்ளார்.

அவரிடம் தான் பாதிரியாரின் செல்போன் இருப்பது தெரியவந்துள்ளது. அவரையும் கைது செய்தால் தான் பாதிரியார் செல்போனில் என்ன விவரங்கள் உள்ளது என்ற முழு விவரமும் தெரியவரும்.

இதையடுத்து தலைமறைவாகியுள்ள அந்த நபரை பிடிக்க சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

போலீசார் தேடுவதை அறிந்த நபர் தற்பொழுது கேரளாவில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் அங்கு விரைந்துள்ளனர். அந்த நபரை கைது செய்த பிறகுதான் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

பாதிரியார் வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். அது தொடர்பான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டுள்ளனர்.

தற்போது கிடைத்துள்ள ஆதாரங்கள் சாட்சியங்களின் அடிப்படையில் குற்றப்பத்திரிகை தயார் செய்யும் பணி தொடங்கப்பட உள்ளது. இன்னும் இரு வார காலத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!
  • Close menu