சுத்தி சுத்தி அடிக்கும் கெட்ட நேரம்.. இந்த விஷயத்தில் நயனை ஓரங்கட்டி சாதனை படைத்த சமந்தா..!
Author: Vignesh22 March 2023, 6:30 pm
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை சமந்தா சினிமாவில் அறிமுகமாகி 12 ஆண்டுகளை கடந்துள்ளார்.
முன்னணி நடிகையான சமந்தா மாஸ்கோவின் காவிரி படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அதன் பின்னர் தமிழ் மற்றும் தெலுங்கில் பல ஹிட் படங்களில் நடித்து புகழ் பெற்றார்.
இதையடுத்து, தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் இருவருக்கு ஏற்பட்ட மனக்கசப்பினால் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர்.
விவாகரத்துக்கு பின் பல மாதங்களாக சமந்தா மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் கடுமையான வலியும் கஷ்டத்தையும் சந்தித்து வந்தார். சிகிச்சைக்கு பின் தற்போது மீண்டு வரும் சமந்தா இந்தி வெப் தொடரில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் பிரபல தனியார் ஊடகம் ஆர்மேக்ஸ் மீடியா மாதம் மாதம் வெளியிட்டு வரும் சினிமா பிரபலங்களின் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. அந்தவரிசையில் இந்தியளவில் பிரபலமான நடிகைகளின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.
இதில், ஆலியா பட், தீபிகா படுகோனே உள்ளிட்ட நடிகைகளை ஓரங்கட்டி நடிகை சமந்தா முதலிடத்தில் இருக்கிறார். அவருக்கு அடுத்து, ஆலியா பட், தீபிகா படுகோனே 2ஆம், 3 ஆம் இடத்தினை பிடித்துள்ளனர். மேலும், நடிகை நயன் தாரா சற்றுப்பின்னடைவை சந்தித்து 4வது இடத்தினை பிடித்துள்ளார்.
Ormax Stars India Loves: Most popular female film stars in India (Feb 2023) #OrmaxSIL pic.twitter.com/2g6WuB2BNm
— Ormax Media (@OrmaxMedia) March 21, 2023