நடிப்புல பின்னி பெடலெடுத்த விக்ரம் – அந்நியன் படத்துக்கு இவ்வளவு சம்பளம் வாங்கினாரா!
Author: Shree22 March 2023, 5:38 pm
படத்திற்கு படம் வித்யாசமான நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த நடிகர் என பெயரெடுத்தவர் நடிகர் விக்ரம். இவர் தமிழில் பல்வேறு ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருந்து வருகிறார். என் காதல் கண்மணி படத்தின் மூலம் 1990ல் அறிமுகமானார்.
அதன் பின்னர் தொடர்ந்து பல தோல்வி படங்களில் நடித்து துவண்டுபோன விக்ரமுக்கு சேது படம் மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. அதன் பின்னர் காசி, ஜெமினி, தூள் , பிதாமகன் , அந்நியன் , தெய்வத்திருமகள் உள்ளிட்ட பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
இவரது திரைப்பயணத்தில் முக்கிய படமான அந்நியன் படத்திற்காக ரூ. 2.5 கோடி சம்பளம் வாங்கினாராம். மிகப்பெரிய ஹிட் படமான அதற்கு இவ்வளவு கம்மி சம்பளமா கொடுக்கப்பட்டது என ரசிகர்கள் ஷாக்காகி விட்டார்கள். இருந்தாலும் அப்போதைக்கு அது பெரிய தொகை தான்.