அன்பு ஜோதி ஆசிரமத்தில் தொடரும் மர்மம்.. மாயமான மனைவி : பரிதவிப்பில் கணவன்!!

Author: Udayachandran RadhaKrishnan
22 March 2023, 10:01 pm

விழுப்புரம் அருகேயுள்ள குண்டாலபுலியூர் அன்பு ஜோதி ஆசிரமத்தில் ஆதரவற்றோர், மனநலம் குன்றியவர்களுக்கு பாலியல் தொல்லை, மற்றும் அடித்து துன்புறுத்தல்களுக்கு ஆளக்கப்பட்ட விவகாரத்தில் ஆசிரம நிர்வாகி ஜீபின் பேபி அவரது மனைவி மரியா உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஆசிரமத்தில் இருந்த 15 பேர் காணவில்லை என வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்க்கொண்டு வருவதோடு காணாமல் போனவர்களை தேடும் பணி பல்வேறு மாநிலங்களில் தனிப்படை மற்றும் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரனை மேற்கொண்டனர்.

இந்நிலையில் முண்டியம்பாக்கத்திலுள்ள விழுப்புரம் அரசு தலைமை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை தேசிய மனித உரிமைகள் ஆணைய குழு உறுப்பினர்கள் சுனில் குமார்மீனா தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினரான பட்டில்கேட்டன் பலிராம், ஏக்தா பக்வித்தா, மோனியா உப்பல், சந்தோஷ்குமார், பிஜீ உள்ளிட்டோர் நேற்றைய தினம் 3 மணி நேரில் தனித்தனியக விசாரனை செய்தனர்.

இரண்டாவது நாளாக தேசிய மனித உரிமைகள் ஆணையக்குழுவினர் இன்று குண்டலப்புலியூர் அன்பு ஜோதி ஆசிரமத்தில் ஆய்வு செய்தனர்.

இன்றைய தினம் மனித உரிமைகள் ஆனையக்குழுவினர் ஆய்வு செய்யும் போது தும்பூரை சார்ந்த கரும்பு வெட்டும் தொழிலாளியான நாகராஜ் தனது மனைவியான தேவியை 7 மாதங்களுக்கு முன் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக ஆசிரமத்தில் அனுமதித்ததாகவும் ஆனால் அவர்கள் வேறு ஆசிரமத்திற்கு அனுப்பி வைத்து நலமுடன் இருக்கிறார்கள் என்று கூறி அலைக்கழித்ததாகவும் மனைவியை மீட்டு தரக்கோரி அங்கிருந்த குழுவினரிடம் புகார் அளித்தார்.

பின்னர் அவரை அழைத்து விசாரணை செய்ததோடு அவரிடம் உள்ள ஆவணங்களை எடுத்துக் கொண்டு நாளை நேரில் சந்திக்குமாறு கூறி அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

  • Kayadu Lohar Visit Kalahasti Temple Crowd Gathered பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!