தந்தை மரணம்: அஜித் வீட்டுக்கு நேரில் சென்று விஜய் ஆறுதல்!

Author: Shree
24 March 2023, 3:09 pm

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியம் (86) உடல் நலக்குறைவால் இன்று அதிகாலை சென்னை வீட்டில் மரணம் அடைந்துள்ளார். அஜித்தின் தந்தை கடந்த 2020ம் ஆண்டு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதனால் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

பக்கவாதத்தால் கடும் உடல் உபாதைகளை எதிர்கொண்டு வந்த சுப்பிரமணியம் இன்று அதிகாலை உயிரிழந்தார். இதையடுத்து அவருக்கு குடும்பத்தினர் ஒன்றுகூடி இறுதி சடங்கு செய்து வருகிறார்கள். அஜித்தின் குடும்பத்தினருக்கு பல அரசியல் கட்சித்தலைவர்கள், திரை நட்சத்திரங்கள் என எல்லோரும் தங்களது ஆறுதலை கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் தற்போது நடிகர் விஜய் காஷ்மீரில் இருந்து சென்னை திரும்பி உடனே அஜித் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறி இருக்கிறார். அஜித் வீட்டுக்கு விஜய் காரில் வந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சினிமாவை தாண்டி அஜித் , விஜய் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  • getti melam serial actor Passed away தூக்கத்திலேயே உயிர் பிரிந்த நடிகர்.. திரையுலகம் அதிர்ச்சி..!!