டீனேஜ் வயதில் மகள்… திருமணம் ஆகி 17 வருடம் கழித்து மீண்டும் அப்பாவான பக்ரு!

Author: Shree
24 March 2023, 7:32 pm

குள்ள மனிதனாக தமிழ் சினிமாவில் பல்வேறு காமெடிகளில் நடித்து பிரபலமானவர் நடிகர் பக்ரு. இவர் கேரளாவை சேர்ந்த இவர் தமிழில் டிஷ்யூம், அற்புத தீவு, காவலன், 7ஆம் அறிவு, அறியான் ஆகிய படங்களில் நடித்துள்ளார். அதே போல் மலையாளத்தில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

மேலும், பல்வேறு தொலைக்காட்சியில் பல சீரியல்களிலும், காமெடி ஷோக்களிலும் நடித்துள்ளார். இவர் கிட்டத்தட்ட 35 வருடங்களாக சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் கடந்த 2006ம் ஆண்டு காயத்ரி என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

இவருக்கு தீப்தா என்ற 14 வயது மகள் இருக்கிறார். இந்நிலையில் திருமணம் ஆகி 17 ஆண்டுகள் கழித்து பக்ரு மீண்டும் அப்பாவாகியுள்ளார். ஆம், பக்ருவுக்கு மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளதை மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.மேலும், தனது மகளை கையில் ஏந்தி இருக்கும் புகைப்படம் ஒன்றும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 616

    0

    0