கார்த்தியின் திரைப்பயணத்தில் முக்கிய மையில் கல்லாக அமைந்த படங்களில் ஒன்று சிறுத்தை. 2011ம் ஆண்டு வெளியான இப்படத்தை சிவா இயக்கினார். அதன் வெற்றியின் அடையாளமாக அவரது பெயர் சிறுத்தை சிவா என்று ரசிகர்கள் அடையாளப்படுத்தி அழைத்து வருகிறார்கள்.
தெலுங்கில் வெளிவந்த ”விக்ரமர்குடு” படத்தின் ரீமேக்கான இதில் கார்த்தி பிட்பாக்கெட் திருடன் மற்றும் போலீஸ் அதிகாரி என இரட்டை வேடத்தில் நடித்து மிரட்டியெடுத்தார். தமன்னா மற்றும் சந்தானம் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய ரோலில் நடித்தார்கள்.
இப்படத்தில் அனைவரையும் வெகுவாக கவர்ந்த கதாபாத்திரம் கார்த்தியின் மகளாக நடித்த நடிகை பேபி ரக்ஷனா தான். அப்படத்தில் அந்த குழந்தைக்கு மிகப்பெரிய ஸ்கோப் கொடுக்கப்பட்டிருக்கும்.
குட்டி பாப்பா பார்த்து ரசித்த ரக்ஷனா தற்போது கிடுகிடுவென வளர்ந்து இருப்பதை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யப்பட்டுள்ளனர். இந்த லேட்டஸ்ட் போட்டோக்கள் சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.