அனிகா நீ ஓரமா போமா… 10 வயதில் செம டஃப் கொடுக்கும் மகேஷ் பாபு மகள்!
Author: Shree24 March 2023, 8:56 pm
தெலுங்கு சினிமாவின் ஸ்டார் நடிகரான மகேஷ் பாபு இளம் வயதில் தன் தந்தையின் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பேமஸ் ஆகி பின்னர் தனது 25ஆவது வயதில் ராஜகுமாருடு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
அப்படத்தை தொடர்ந்து இவரது முராரி, ஒக்கடு, அத்தடு, போக்கிரி ஆகிய திரைப்படங்கள் மாபெரும் வெற்றி படைத்து வசூல் வேட்டையாடியது. இவர் தெலுங்கு சினிமா ரசிகர்களுக்கு நம்ம தளபதி விஜய் போன்றவர். ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.
மகேஷ் பாபு நம்ரதா சிரோத்கர் என்பவரை கடந்த 2005ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவருக்கு சிதாரா கட்டமனேனி என்ற மகளும் கௌதம் கட்டமனேனி மகனும் உள்ளனர்.
தற்போது 10 வயதாகும் சிதாரா தாத்தா, பாட்டி மீது அதீத பாசத்தில் இருந்து வந்தார். அவரகளது மறைவு அவரை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தியது. அதிலிருந்து மீண்டு வந்து இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சித்தாராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இவர் அனிகாவுக்கு செம டஃப் கொடுப்பதாக நெட்டிசன்ஸ் கூறி வருகிறார்கள்.