தினமும் தயிர் சாப்பிடுறதால இப்படி எல்லாம் கூட நடக்குமா…???
Author: Hemalatha Ramkumar25 March 2023, 4:35 pm
இந்திய உணவு வகைகளில் தயிர் மிகவும் பிரபலமான உணவுகளில் ஒன்றாகும். கால்சியம், வைட்டமின் பி-2, வைட்டமின் பி-12, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் நிறைந்த தயிர் அற்புதமான ஆரோக்கியம் மற்றும் அழகு நன்மைகளைக் கொண்டுள்ளது.
தயிரில் இவ்வளவு நன்மைகள் இருந்தபோதிலும், தினமும் தயிர் சாப்பிடுவதால் ஒரு சில பக்க விளைவுகளும் இருக்கத்தான் செய்கிறது. இந்த பதிவில், தினமும் தயிர் சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
உங்களுக்கு பலவீனமான செரிமான அமைப்பு இருந்தால், அதிக தயிர் சாப்பிடுவதைத் தவிர்த்து விடுங்கள். இது மலச்சிக்கலை ஏற்படுத்தும்.
தயிரில் கேலக்டோஸ் உள்ளது என்பது அறியப்படுகிறது. இது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைத் தூண்டும் ஒரு கலவை. ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் ஹைப்பர் கிளைசீமியாவால் ஏற்படும் நாள்பட்ட அழற்சி இருதய நோய் மற்றும் எலும்பு பலவீனத்திற்கு பங்களிக்கிறது.
தயிரில் அதிக அளவு கொழுப்பு இருப்பதால், அதிகப்படியாக தயிர் சாப்பிடுவது எடை அதிகரிக்க வழிவகுக்கும்.
பாலில் இருந்து பெறப்படும் உணவுகளில் அதிக அளவு நிறைவுற்ற கொழுப்புகள் உள்ளன. இவற்றை அதிக அளவில் உட்கொள்ளும் போது, இந்த கலவைகள் எலும்பு அடர்த்தியை பலவீனப்படுத்தலாம். இதன் விளைவாக மூட்டுவலி நோயாளிகளுக்கு மூட்டு அசௌகரியம் ஏற்படும்.
ஆஸ்துமா, சைனஸ் நெரிசல் அல்லது சளி மற்றும் இருமல் போன்ற சுவாச நிலைகள் உள்ளவர்கள் தயிர் சாப்பிட்டால் சிரமம் உண்டாவதோடு, வீக்கத்தையும் தூண்டும்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.