உங்களுக்கு என்ன சரும பிரச்சினை இருந்தாலும் சரி, தக்காளி இருந்தா எல்லாத்தையும் அசால்ட்டா சமாளிச்சுடலாம்!!!

Author: Hemalatha Ramkumar
25 March 2023, 5:53 pm

கோடைக்காலத்தில், சருமம் பழுப்பு நிறமாக மாறுவது பொதுவான பிரச்சினையாகும். இது சன் டான் எனப்படும். வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே சன் டானை போக்குவது எப்படி என்பதை காணலாம்.

வைட்டமின் ஏ, சி, பி, கே ஆகியவற்றின் வளமான ஆதாரமாக தக்காளி உள்ளது. இது அதிகப்படியான சரும எண்ணெய் உற்பத்தியைக் கட்டுப்படுத்துகிறது, முகப்பருவை போக்குகிறது, கொலாஜன் உற்பத்தியைத் தூண்டுகிறது. தக்காளியில் ஏராளமான வைட்டமின் சி காணப்படுவதால், அவை தழும்புகளை மறைத்து, சருமத்தை பிரகாசமாக்க உதவுகின்றன. கூடுதலாக, தக்காளியில் “லைகோபீன்” உள்ளது. இது சூரிய ஒளியில் இருந்து பாதுகாப்பை வழங்குகிறது.

◆க்ளென்சராக தக்காளி: ஒரு தக்காளியில் இருந்து சாறு எடுத்து 1 டீஸ்பூன் பாலுடன் கலக்கவும். உங்கள் முகத்தை வெறும் நீரில் கழுவிய பின், கலவையை உங்கள் முகத்தில் தடவி சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் விட்டுவிட்டு கழுவவும்.

◆திறந்த துளைகளை போக்க: தக்காளி சாற்றுடன் சில துளிகள் எலுமிச்சை சாறு கலந்து உங்கள் முகத்தில் தடவவும். உங்கள் தோலை மெதுவாக மசாஜ் செய்து, 15 நிமிடங்களுக்கு விட்டுவிட்டு முகத்தை கழுவுங்கள்.

◆ஆரோக்கியமான பளபளப்பிற்கு: தக்காளி சாறுடன் சம அளவு தேன் கலந்து கொள்ளவும். அதை உங்கள் தோலில் தடவி 20 நிமிடங்களுக்கு பிறகு கழுவினால், சருமம் பொலிவடையும்.

◆தோல் எரிச்சல், சிவத்தல் மற்றும் வெயில் காரணமாக ஏற்பட்ட எரிச்சலை சமாளிக்க: தக்காளி சாற்றுடன் தயிர் கலந்து, கலவையை உங்கள் முகத்தில் தடவவும். இருபது நிமிடங்கள் காத்திருந்து முகத்தை கழுவவும்.

◆ டான் மறைய: தக்காளி சாறு மற்றும் எலுமிச்சை சாறு ஒன்றாக கலந்து உங்கள் தோலில் தடவவும். எலுமிச்சை மற்றும் தக்காளி இரண்டும் ப்ளீச்சிங் பண்புகளைக் கொண்டிருப்பதால், கலவையானது பழுப்பு நிறத்தை போக்கவும், சீரற்ற சருமத்தை மங்கச் செய்யவும் உதவும்.

◆எக்ஸ்ஃபோலியேட் செய்ய ஒரு ஸ்க்ரப் போல தக்காளி: தக்காளியை இரண்டு பகுதிகளாக வெட்டி, ஒரு பாதியை கிரானுலேட்டட் சர்க்கரையில் நனைக்கவும். இப்போது, இதனைக் கொண்டு உங்கள் முகத்தை மெதுவாக தேய்க்கவும். இந்த ஸ்க்ரப்பை தொடர்ந்து பயன்படுத்துவதால் சருமம் மென்மையாகவும், மிருதுவாகவும், பிரகாசமாகவும் இருக்கும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 429

    0

    0