தள்ளுவண்டி கடை உரிமையாளரை கண்மூடித்தனமாக தாக்கிய திருநங்கைகள் : ஷாக் சிசிடிவி காட்சி!

Author: Udayachandran RadhaKrishnan
25 March 2023, 6:10 pm

திருப்பூர் – பல்லடம் நகராட்சிக்குட்பட்ட பெரியார் நகரில், இசக்கி பாண்டி என்பவர் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

என்ஜிஆர் சாலையில் தள்ளுவண்டி கடை நடத்தி வரும் இசக்கி பாண்டியன், நேற்று வியாபாரம் முடித்து விட்டு நள்ளிரவு 12 மணி அளவில் தள்ளு வண்டியோடு வீடு திரும்பும் போது, திருநங்கை ஒருவர் அவரிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இசக்கி பாண்டியன் பணம் இல்லை என கூறிவிட்டு தனது வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் ஆத்திரமடைந்த திருநங்கைகள் இரவு 12 மணி அளவில் இசக்கிபாண்டியன் வீட்டின் மீது கற்களை வீசியுள்ளனர்.

சத்தம் கேட்டு வெளியே வந்த பாண்டியன் குடும்பத்தினரையும் தாக்கியுள்ளனர். மேலும் பாண்டியனை கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

திருநங்கைகள் பாண்டியன் மீது தாக்குதல் நடத்தும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. வாய் மற்றும் மூக்கு பகுதியில் பலத்த காயமடைந்த பாண்டியன் சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

https://player.vimeo.com/video/811567446?h=a764fb52c2&badge=0&autopause=0&player_id=0&app_id=58479

சிசிடிவி காட்சிகளை வைத்து பல்லடம் காவல்துறையினர் இரு தரப்பினர் இடையே விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நள்ளிரவில் திருநங்கைகள் பாண்டியனை சரமாரியாக தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

  • suriya act in venky atluri movie soon before vaadivaasal மீண்டும் ரொமான்டிக் ஹீரோவாக களமிறங்கும் சூர்யா? அதுவும் இந்த டைரக்டர் படத்துலயா?