கட்சி, அமைச்சர்கள், குடும்பம் என எதுவுமே முதலமைச்சர் கட்டுப்பாட்டில் இல்லை : ஹெச் ராஜா விமர்சனம்!!
Author: Udayachandran RadhaKrishnan26 March 2023, 11:38 am
மதுரையில் பாஜக தேசிய செயற்க்குழு உறுப்பினரும், மூத்த தலைவருமான ஹெச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் புழுகு முட்டையாக உள்ளது.
கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் இன்னும் செயல்படுத்தவில்லை, திமுக மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்று வருகிறது, தமிழக அரசு மத்திய அரசின் திட்டங்களை தங்கள் திட்டங்கள் என கூறி வருகிறது.
திமுக கட்சி, அமைச்சர்கள், குடும்பம் என எதுவுமே மு.க.ஸ்டாலின் கண்ட்ரோலில் இல்லை, திமுகவில் தடி எடுத்தவன் தண்டல்காரனா உள்ளது.
அதானி குழுமத்தால் யாருக்கு என்ன நஷ்டம் வந்துள்ளது, ஒரு பொதுத்துறை வங்கியாவது பாதிக்கப்பட்டதா?, ராகுல்காந்தி எப்போதும் நல்ல மனநிலையுடம் பேச மாட்டார், ராகுல்காந்திக்கு எதிராக தீர்ப்பு வந்ததால் எம்.பி பதவி தகுதியிழப்பு செய்யப்பட்டு உள்ளார்.
மக்கள் பிரதிநிதிக்கு எதிராக வழக்கின் தீர்ப்பு வந்தால் உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்ற தீர்ப்பு தெரிவித்தள்ளது.
தமிழகத்தில் தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்ய டெல்லியில் குழு உள்ளது, அந்த ,குழுவே தேர்தல் கூட்டணியை முடிவு செய்யும்” என்றார்.