தாயான பின்பு பில்லா பட பாணியில் பிகினியில் ஹாட்டாக நயன்தாரா..? ரசிகர்கள் ஷாக்..!

Author: Rajesh
26 March 2023, 1:21 pm

தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் என பல உச்ச நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டிப் பறப்பவர் நடிகை நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா, கடந்த ஆண்டு தனது காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்களை காதல் திருமணம் செய்து கொண்டார்.

nayanthara-connect-interview-updatenews360

இவர்களுக்கு இரட்டை குழந்தையும் பிறந்தது. நயன்தாரா திருமணத்திற்கு முன் பல திரைப்படங்களில் கவர்ச்சியான ரோல்களில் நடித்திருந்தாலும் திருமணத்திற்குப் பின் எந்த ஒரு கிளாமர் கதாபாத்திரத்திலும் நடிக்கவில்லை. தற்போது பாலிவுட்டில் ஒரு திரைப்படம், தமிழில் சில திரைப்படங்கள் என கமிட்டாகி நடித்து வருகிறார்.

இந்நிலையில், அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ஜவான் படத்தில் நயன்தாரா நடிக்கும் கதாபாத்திரம் அதில் வரும் சில சீன்கள் குறித்து தகவல்கள் இணையத்தில் உலா வருகிறது. அதாவது, இப்படத்தில் இடம் பெறும் சில சீன்களில், பிகினி உடையில் ஹாட்டாக நயன்தாரா நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவலால் ரசிகர்கள் ஷாக்காகி உள்ளனர்.

nayanthara - updatenews360.jpg 2
  • வாடி வாசலில் களமிறங்கிய இளம் நடிகை…லேட்டஸ்ட் தகவலால் உற்சாகத்தில் ரசிகர்கள்..!