விஜய் – சங்கீதா விவாகரத்து கட்டுக்கதை கட்டிய டுபாக்கூர்கள்.. மனைவியுடன் தோசை சுட்டு சாப்பிடும் தளபதி..! (வீடியோ)

Author: Vignesh
27 March 2023, 4:03 pm

இணையத்தில் சமீப நாட்களாக தீயாய் பரவிக் கொண்டிருக்கும் செய்திதான் விஜய் தனது மனைவி சங்கீதாவை பிரிந்து வாழ்கிறார் என்று.

நடிகர் விஜய்க்கும் அவருடைய மனைவி சங்கீதாவிற்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்றும், இதனால் சங்கீதா வெளிநாட்டில் உள்ள தனது தந்தையின் வீட்டிற்கு மகன் மற்றும் மகளுடன் சென்றுவிட்டார் என்றும் தகவல் வெளியாகி சோசியல் மீடியாவை பதம் பார்த்தது.

அதுமட்டுமல்லாமல், நடிகையின் மேல் உள்ள காதல்தான் காரணம் என்றும், அந்த நடிகையுடன் விஜய்க்கு தவறான உறவு உள்ளது என்றும், இதை அறிந்து தான் சங்கீதா சென்று விட்டதாக சர்ச்சைக்குரிய தகவல் பரவியது.

ஆனால், அது உண்மையில்லை. அந்த நடிகை தனது நீண்ட கால காதலரை தான் இன்னும் 4 வருடங்கள் கழித்து திருமணம் செய்துகொள்ள போகிறார் என தகவல் வெளிவந்தது.இதன்பின் அந்த நடிகைக்கும் விஜய்க்கும் இடையே எந்த ஒரு தவறான உறவும் இல்லை என கூறப்பட்டது.

இந்நிலையில், நடிகர் விஜய்க்கும், அவருடைய மனைவி சங்கீதாவிற்கும் இடையே எந்த ஒரு பிரச்சனையும் இல்லையாம். விஜய்யும் அவருடைய மனைவி சங்கீதாவும் சென்னையில் உள்ள வீட்டில் தான் இருக்கிறார்கள்.

சங்கீதா வெளிநாட்டில் உள்ள தனது தந்தையின் வீட்டிற்கு செல்லவில்லை என பிரபல மூத்த பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார். இதன்முலம் பலநாள் சர்ச்சைக்கு ஒரு முடிவு கிடைத்துள்ளது.

இதனிடையே, விஜய்யின் விவாகரத்து குறித்த பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில், விஜய் சில ஆண்டுகளுக்கு முன் எடுத்த வீடியோ ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அதில் தனது வீட்டில் விஜய் தனது மனைவி சங்கீதாவுடன் அமர்ந்து தோசை சுட்டு சாப்பிடுகிறார்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?