வீட்டை சுத்தம் செய்வதாக சொல்லி விட்டு தூக்கில் தொங்கிய கணவன் – மனைவி : அலறி துடித்த குடும்பம்… போலீசார் விசாரணையில் பகீர்!

Author: Babu Lakshmanan
27 March 2023, 7:00 pm

திருவள்ளூர் : செங்குன்றத்தில் ஆன்லைன் டிரேடிங் மூலம் ஏற்பட்ட கடன் தொல்லையால் மன உளைச்சலுக்கு ஆளாகி, கணவன் – மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அம்பத்தூர் பகுதி சேர்ந்தவர் முருகேசன். இவர் இவருடைய மனைவி ஜெயந்தியுடன் அதே பகுதியில் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி தனது ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் தந்தையுடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தார். தனியார் நிறுவன ஊழியராக பணியாற்றி வரும் இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். தற்கொலை செய்து கொண்ட முருகேசன் ஆன்லைன் டிரேடிங்என்கின்ற வர்த்தகத்தின் மூலம் பல லட்ச ரூபாய் இழந்ததாக அதனால் தொழில் நஷ்டம் ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனால், அவரது உறவினர்கள் மற்றும் அவரது நண்பர்கள் இடையே கடன் வாங்கி, மீண்டும் அந்த தொழிலை செய்ய முயற்சித்த போது, மீண்டும் கடன் ஏற்பட்டு, அந்த தொழிலால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆனதாக தெரிகிறது. கடன் கொடுத்தவர்களும், உறவினர்களும் பணத்தை திருப்பி கேட்டு தொந்தரவு செய்யவே, இதனால் மனமுடைந்த கணவன் மனைவி இருவரும் செங்குன்றத்தில் உள்ள அவர்களுடைய சொந்தமான வீடான எல்லையம்மன் பேட்டை பகுதில் அமைந்துள்ள வீட்டிற்கு வந்துள்ளனர்.

அந்த வீட்டினை சுத்தம் செய்வது போல் அங்கேயே இருந்த அவர்கள், இந்தக் கடன் சுமை குறித்து மன உளைச்சலால் ஒருவருக்கு ஒருவர் மனம் விட்டு பேசி தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர். ஒரே வீட்டில் இருவரும் தனித்தனி கயிறு கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

இதனையடுத்து, வீட்டினை சுத்தம் செய்ய சென்றவர்கள் வீட்டிற்கு திரும்ப வராததால் முருகேசனின் தந்தை, அவர்களின் செல்போனை தொடர்பு கொண்ட போது, அவர்களை செல்போனானது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால், அவரது பக்கத்து வீட்டுக்காரர் கிருஷ்ணமூர்த்தி என்பவரை தொடர்பு கொண்டு, வீட்டுக்கு பார்க்கச் சொல்லியுள்ளார். அவர் சென்று பார்த்தபோது இருவரும் தூக்கில் தொங்கியது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர், கிடைத்த தகவலின் பேரில் முருகேசன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தூக்கில் தொங்கியபடி இருந்த மகன் மற்றும் மருமகள் உடலை பார்த்து கதறி அழுதார்.

இதனை அடுத்து செங்குன்றம் போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆன்லைன் டிரேடிங் மூலம் கடன் சுமையாகி கணவன், மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • my scenes were deleted in goat movie said by black padi சண்ட போட்டு படத்துல நடிச்சேன்; ஒரு பயனும் இல்ல- வேதனையில் GOAT பட நடிகர்… அடப்பாவமே!
  • Close menu