கம்பீர நடையிட்டு கெத்தா வந்த சூப்பர் ஸ்டார்… கரகோஷத்தை கேட்டு மிரண்டுப்போன மீனா!

Author: Shree
27 March 2023, 7:26 pm

தமிழ் சினிமாவின் மிகப்பெரும் ரசிகர்கள் கூட்டம் கொண்டு அன்றும் இன்றும் என்றும் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் ரஜினிகாந்த். இவரது படத்தில் ஒரு சின்ன ரோல் கிடைத்தால் கூட அடுத்த 10 பட வாய்ப்புகள் அந்த நைட்டே வந்து குவிந்துவிடும் என பல கலைஞர்கள் ஏக்கம் கொன்று இருப்பார்கள்.

அப்படித்த ரஜினி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்னர் அவருக்கே எஜமான் படத்தில் ஜோடியாக நடித்தவர் மீனா. இவர் ரஜினி, கமல், அஜித், அர்ஜுன் என முன்னணி நடிகர்களின் ஜோடியாக பல திரைப்படங்களில் நடித்து 80ஸ் மற்றும் 90ஸ் களில் கனவு கன்னியாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர்.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழி திரைப்படங்களிலும் பிரபல நடிகையாக இருந்து வந்த இவர், 2009ம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். இதனிடையே கணவர் தொற்றுநோயால் தவறிவிட்டார்.

மகள் நைனிகா தெறி படத்தில் விஜய் மகளாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். இந்நிலையில் திரையுலகில் மீனா 40 ஆண்டுகாலம் நிறைவு செய்ததை மீனா40 என சமீபத்தில் விழா ஒன்றை நடத்தினர். அதில் ரசிகர்களின் கரகோஷங்களுடன் ரஜினி என்ட்ரி கொடுத்த தருணத்தில் மீனா உள்ளிட்ட அங்கிருந்த அனைவரும் வாயடைத்து போய்விட்டார்கள். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

  • Ajith reunite Again With Adhik அஜித்துடன் மீண்டும் கூட்டணி… உருவாகும் மார்க் ஆண்டனி 2.. ஆதிக் முடிவு!!
  • Views: - 2353

    122

    18