யாருமே இல்லாம கல்யாணம் பண்ணினோம்…. திடீர் திருமணம் குறித்த ரகசியத்தை உடைத்த நடிகை பிரியங்கா..!
Author: Vignesh28 March 2023, 10:30 am
சீரியலில் எப்போதும் புடவை கட்டி குடும்ப பெண்ணாக வளம் வரும் ரோஜா சீரியல் ஹீரோயின் தான் பிரியங்கா, சன் டீவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான தொடர்களில் ஒன்று ரோஜா. திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. காதல், கலாட்டா, நகைச்சுவை என கமர்ஷியல் படத்திற்கு என்ன என்ன வேண்டுமோ அதையெல்லாம் இந்த சீரியல் தந்து, ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்துள்ளது இந்த தொடர்.
இந்த தொடரில் கதாநாயகியாக நடிப்பவர் ரோஜா என்கிற பிரியங்கா நல்கார். இவர் ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் பிறந்துள்ளார். அங்கேயே தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்துள்ளார். அதன்பிறகு ஒருசில சினிமா படங்கள் என சினிமா பயணத்தை தொடங்கிய இவர் தற்போது சீரியல் நடிகையாக வலம் வருகிறார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா, தமிழ் சினிமா நடிகைகளுக்கு சவால் விடும் அளவுக்கு அவ்வப்போது, புகைப்படங்களை சிலதை வெளியிட்டு உள்ளார் .
இப்போது, நிச்சயதார்த்தம் முடிந்து கிட்டத்தட்ட 6 வருடங்களுக்குப் பிறகு ராகுலை என்பவரை பிரியங்கா நல்காரி திருமணம் செய்து கொண்டுள்ளார். மிகவும் எளிய முறையில் கோயிலில் இவர்கள் திருமணம் செய்து கொண்டு உள்ளனர். அந்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பிரியங்கா நல்காரி வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறிவருகிறார்கள்.
மலேசியாவில் உள்ள முருகன் கோவிலில் திருமணம் செய்துகொண்டார். உடன் அவரது பெற்றோர்கள் கூட இல்லை. இதுகுறித்து ஒரு பேட்டியில் பிரியங்கா, விசா போன்ற பிரச்சனைகளால் தான் எனது திருமணத்திற்கு பெற்றோர்களால் வர முடியவில்லை என்றும், ஆனால் அவர்கள் தனது திருமணத்தால் சந்தோஷத்தில் உள்ளார்கள் என கூறியுள்ளார்.