திமுக மாவட்ட செயற்குழு கூட்டத்தில் கடும் கூச்சல் குழப்பம்… இருதரப்பினரிடையே எழுந்த திடீர் மோதல் : வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

Author: Babu Lakshmanan
28 March 2023, 1:14 pm

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் தனியார் திருமண மண்டபம் ஒன்றில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளரும், கும்முடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் திமுகவில் உறுப்பினர் சேர்க்கை, கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து கும்மிடிபூண்டி ஒன்றிய செயலாளர் பரிமளம் பேசி கொண்டிருந்த போது, நிகழ்ச்சிகள் குறித்து முறையான தகவல்கள் கொடுப்பதில்லை என்றும், மாவட்ட செயலாளர் சர்வாதிகாரி போல் செயல்படுகிறார், தொண்டர்களை மதிப்பதில்லை எனக் குற்றம் சாட்டினர்.

அப்போது மாவட்ட செயலாளிரின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்த நபர்களுடன், கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், கைகலப்பாக மாறி கடும் கூச்சல் குழப்பம் நிலவியது. மாவட்ட செயலாளர் கோவிந்தராஜன் முன்னிலையில் கட்சி நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் தாக்கி கொள்ள முற்பட்ட சம்பவத்தால் செயற்குழு கூட்டத்தில் பரபரப்பு நிலவியது.

திமுக செயற்குழு கூட்டத்தில் நடைபெற்ற இந்த சலசலப்பு காட்சிகள் சமூக வலைத்தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகின்றது.

https://player.vimeo.com/video/812322675?h=55e9ba4d6b&badge=0&autopause=0&player_id=0&app_id=58479
  • Pushpa 2 vs Mufasa collection புஷ்பா2-க்கே பயம் காட்டிய முஃபாஸா…வசூலில் முரட்டு சாதனை..!
  • Views: - 386

    0

    0