“விஜய் கிளைமேக்ஸை மாத்த சொன்னார்.. நா ஹீரோவையே மாத்திடேன்”.. வெளிப்படையாக பேசிய இயக்குனர்..!
Author: Vignesh28 March 2023, 1:38 pm
தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் ஒரு நடிகர் விஜய். இவர் படத்திற்கு படம் புது புது வசூல் சாதனையை நிகழ்த்தி வருகிறார். எனவே இவரின் படத்தை தயாரிக்கவும், இயக்கவும் பலர் தவம் இருந்து வருகின்றனர். தன் திரைப்பயணத்தில் விஜய் பார்த்திடாத வெற்றியே இல்லை என்று சொல்லும் அளவுக்கு உயர்ந்துள்ளார்.
அந்த வெற்றிக்கெல்லாம் அஸ்திவாரம் போட்ட திரைப்படம் தான் பூவே உனக்காக படத்தின் இயக்குனர் விக்ரமன். இவர் இயக்கத்தில் வெளியான பூவே உனக்காக திரைப்படம் விஜய்க்கு முதல் வெற்றிப்படமாக அமைந்தது.
அந்த சமயத்தில் விஜய்யால் இக்கதாபாத்திரத்தில் சிறப்பாக நடிக்கமுடியுமா ? சற்று சொதப்பினாலும் நல்ல கதை தோல்வியடைந்துவிடும், வேறொரு ஹீரோவை வைத்து இப்படத்தை இயக்குங்கள் என பலர் விக்ரமனுக்கு அட்வைஸ் செய்த நிலையில், அதையெல்லாம் காதில் வாங்கிக்கொள்ளாது விஜய் மீது முழு நம்பிக்கை வைத்து பூவே உனக்காக படத்தை விக்ரமன் துவங்கினார். இதன் பிறகு விஜய்யின் திரைவாழ்க்கையில் அவர் திரும்பிப்பார்க்கவே இல்லை.
விஜய்க்கென ஒரு தனி ரசிகர் கூட்டம் பூவே உனக்காக படத்திற்கு பிறகு உருவான நிலையில் ஒரு பேட்டியில் விக்ரமன் பேசுகையில், விஜய்க்கும் எனக்கும் உன்னை நினைத்து படத்தின்போது சில முரண்பாடு ஏற்பட்டதால், அதன் பின்னர் இருவரும் பரஸ்பரமாக பேசி பிரிந்தோம், என தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர், சூர்யா நடிப்பில் விக்ரமன் இயக்கிய உன்னை நினைத்து படத்தில் விஜய் தான் முதலில் நடித்ததாகவும், சில நாட்கள் படப்பிடிப்பில் கலந்துகொண்ட விஜய் கதையில் சில மாற்றங்களை கூறியதாகவும், ஆனால் விக்ரமன் கதையில் மாற்றங்கள் செய்ய விரும்பவில்லை என்பதால், விஜய்யும் விக்ரமனும் எந்த பிரச்னையும் இன்றி பரஸ்பரமாக பேசி பிரிந்ததாக, விக்ரமன் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் தற்போதும் விஜய்யுடன் நல்ல நட்பில் இருந்து வருவதாகவும் விக்ரமன் தெரிவித்துள்ளார்.