ஒரே பைக்கில் வந்த 3 பேர்… எதிரே வந்த லாரி : நொடியில் நடந்த பயங்கர விபத்து…பரிதாப பலி!!!

Author: Udayachandran RadhaKrishnan
28 March 2023, 5:46 pm

மதுரை மாவட்டம் பேரையூரை அடுத்துள்ள தெய்வநாகையாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தங்கப்பாண்டி, மாயாண்டி, கண்ணன் சென்னை, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வரும் இவர்கள் தெய்வநாகையாபுரம் கிராமத்தில் நடைபெற்று வரும் பங்குனி பொங்கல் திருவிழாவிற்காக சொந்த ஊர் வந்திருந்தாக கூறப்படுகிறது.

இன்று மாலை கோவிலில் பூஜைகள் செய்ய பொருட்களை வாங்குவதற்காக இருசக்கர வாகனம் மூலம் பேரையூர் வந்து கொண்டிருந்த போது சிலைமலைப்பட்டி எனும் இடத்தில் இருசக்கர வாகனம் மீது எதிரே வந்த லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.,

இதில் இருசக்கர வாகனத்தில் வந்த தங்கப்பாண்டி, மாயாண்டி, கண்ணன் என்ற மூவரும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த பேரையூர் காவல் நிலைய போலிசார் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • retro team invited rajinikanth for audio launch function சூர்யா பட ஆடியோ வெளியீட்டில் கலந்துகொள்ளும் ரஜினிகாந்த்? மாஸ் ஆ இருக்கப்போகுது!