நான் சத்தியமா குடிக்கல.. கெஞ்சிய நபர்.. மது அருந்தியதாக காட்டிய ப்ரீத் அனலைசர் : விஸ்வரூபமான விவகாரம்!!
Author: Udayachandran RadhaKrishnan28 மார்ச் 2023, 6:26 மணி
சென்னை சாலி கிராமத்தை சேர்ந்தவர் தீபக்,. இவர் ராயப்பேட்டை பகுதியில் ஒரு வேலை விஷயமாக சென்று விட்டு எல்டாம்ஸ் சாலை வழியாக காரில் சாலி கிராமத்திற்கு திரும்பி சென்றார்.
அப்போது அங்கு வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், தீபக்கின் வாகனத்தை மறித்து அவர் மது அருந்தியுள்ளாரா என ப்ரீத் அனலைசர் கொண்டு சோதனை செய்துள்ளார்.
அப்போது தீபக் மது அருந்தியிருப்பதகாவும், அவர் உடலில் 45 சதவிகிதம் ஆல்கஹால் இருப்பதாக இயந்திர சோதனையில் தெரியவந்தது.
ஆனால் தீபக் இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்தார். குடிப்பழக்கமே இல்லாத தனக்கு எப்படி குடித்ததாக காமிக்கிறது. உங்கள் இயந்திரத்தில் கோளாறு உள்ளுது என வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மது குடித்து வருபவர்களை இதை வைத்துதான் வழக்கு போடுகிறோம், குடித்து விட்டு வாகனம் ஓட்டுவது தொடர்பாக 1000 வழக்கு பதிவு செய்ய வேண்டும், எனவே ஆல்கஹால் பதிவு இருந்த ரசீதில் கையெழுத்திடுங்கள் என போலீசார் வற்புறுத்தியுள்ளனர்.
ஆனால் தனது முடிவில் உறுதியாக இருந்த தீபக், போலீசாரை அரசு மருத்துவமனைக்கு வாருங்கள், ரத்தத்தை எடுத்து பரிசோதித்து பாருங்கள், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு போகலாம் என அழைத்தார்.
வாக்குவாதம் நீண்ட நிலையில், போலீசார் வாகனத்தில் இருந்த மற்றொரு ப்ரீத் அனலைசர் இயந்திரத்தை எடுத்து வந்து, தீபக்கை ஊதச் சொல்லி சோதனை செய்தனர்.
அப்போது சோதனையில் தீபக் மது அருந்தவில்லை என தெரியவந்தது. அதன்பிறகே தீபக்கை போலீசார் விடுவித்துள்ளனர்.
இந்த நிலையில் 1000 வழக்கு கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக குடித்தவர்களை விட்டுவிட்டு, குடிப்பழக்கம் இல்லாத என்னை குடித்ததாக ஒப்புக்கொள்ள வற்புறுத்துவது நியாயமா என தீபக் வீடியோவை வெளியிட்டு புகார் செய்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.
இந்த விவகாரம் தமிழகத்தில் அனல்பறந்த நிலையில், சம்மந்தப்பட்ட போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரிக்கவும், ப்ரீத் அனலைசர் இயந்திரத்தை ஆய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
0
0