என்னை ஏமாத்திட்டாங்க… செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த விவசாயி : பரபரப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan28 March 2023, 8:22 pm
வாழப்பாடி பகுதியை சேர்ந்த வரதராஜன்(வயது 55) விவசாயியான இவருக்கும் இவரது சகோதரர் ராமசாமி என்பவருக்கும் நிலம் பாகப்பிரிவினை செய்வதில் கருத்து வேறுபாடு இருந்தாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் விவசாயி வரதராஜன் இன்று மதியம் மன்னாயக்கன்பட்டி பகுதியில் தனியார் செல்போன் டவர் மீது ஏறினார். பின்பு தற்கொலை செய்துகொள்வதாக கூறி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
வாழப்பாடி தீயணைப்பு வீரர்கள் மற்றும் டிஎஸ்பி ஹரிசங்கரி தலைமையிலான வாழப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விவசாயி வரதராஜனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது தீயணைப்பு வீரர் ஒருவர் செல்போன் டவர் மீது ஏற முற்பட்டார். அப்போது என்னை காப்பாற்ற முயற்சி செய்தால் செல்போன் டவரில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறி வரதராஜன் குதிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஒருவேளை குதித்தால் விவசாயி வரதராஜனை காப்பாற்ற செல்போன் டவரை சுற்றிலும் வைக்கோல் கட்டுகளை அடுக்கினர்.
அப்போது தவறின் உச்சியில் உட்கார்ந்தபடி கீழே குதிக்க முயற்சி செய்ததால் அப்பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டது. உச்சி வெயிலில் மயக்கம் வந்த நிலையில் படுத்தபடி போனில் பேசிக் கொண்டிருந்த இந்த போது சாதுரியமாக தீயணைப்பு வீரர்கள் டவர் மீது ஏறி வரதாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்பு விவசாய வரதராஜனின் இடுப்பில் கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர். தொடர்பான உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி வாழப்பாடி போலீசார் வரதராஜனை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
செல்போன் டவர் மீது விவசாயி தற்கொலை முயற்சி ஈடுபட்ட சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் பகுதியில் குவிந்ததால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு பதற்றமும் ஏற்பட்டது.