தமிழ் பெயர் பலகை விவகாரம்… ராமதாஸ் தனது நிலைப்பாட்டை மாற்ற வேண்டும் : விக்கிரமராஜா வேண்டுகோள்..!!

Author: Babu Lakshmanan
29 March 2023, 10:00 am

கோவை : பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் ராமதாஸ் தமிழில் பெயர் பலகை இல்லாத கடைகளில் மையிட்டு அழிப்போம் என்ற நிலைபாட்டை தவிர்க்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மே 5 ஆம் தேதி வணிகர் தின மாநில மாநாடு ஈரோட்டில் நடைபெறுகிறது. இது குறித்த கோவை மண்டல சிறப்பு ஆலோசனைக் கூட்டம் கோவை சாய்பாபா காலனி உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. இதை தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா, வணிகர் உரிமை மாநாட்டில் லட்சக்கணக்கான வணிகர்கள் பங்கேற்க உள்ளதாக தெரிவித்தார்.

அனைத்து மாநில தலைவர்கள், மாநில அமைச்சர்கள் இம்மாநாட்டில் பங்கேற்க உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், 5 ஆண்டு என்பதை ஓராண்டாக உணவு தர நிர்ணயம் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என்றும், ஜி.எஸ்.டி.யை எளிமையாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்படும் என்றும் ஏப்ரல் 18″ஆம் தேதி டெல்லியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளதாகவும் அவர்‌ கூறினார்.

எம்.ஆர்.பி. கொண்டு வணிகர்களை வஞ்சிக்கும் கார்ப்பிரேட்டிற்கு அரசு துணை போவதாக தோன்றுகிறது எனவும் குற்றம்சாட்டினார். ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்றும், ஆன்லைன் வர்த்தகத்தை வரைமுறைப்படுத்த வேண்டும் என்றும் விக்கிரமராஜா கூறினார்.

மேலும், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் ராமதாஸ் தமிழில் பெயர் பலகை இல்லாத கடைகளில் மையிட்டு அழிப்போம் என்ற நிலைபாட்டை தவிர்க்க வேண்டும் எனவும்‌, இவ்விவகாரத்திற்கு ஒரு மாத அவகாசம் என்பது போதாது என கூறிய அவர்‌, எங்கள் அமைப்பு சார்பில் அனைத்து வணிகர்களுக்கு தமிழ் மொழியில் பெயர் பலகை வைக்கக்கோரி சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…