ஆசிரியர் தகுதித் தேர்வு… 98% சதவீதம் பட்டதாரி ஆசிரியர்கள் FAIL… கேள்விக்குறியான கல்வியின் தரம்..!!
Author: Babu Lakshmanan29 March 2023, 12:59 pm
ஆசிரியர் தகுதித் தேர்வு 2ம் தாளில் 2 சதவீதம் பட்டதாரி ஆசிரியர்கள் கூட தேர்ச்சி பெறாத சம்பவம் பெற்றோர் மற்றும் கல்வி ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வின் 2ம் தாளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில், கடந்த பிப்ரவரி மாதம் ஆசிரியர் தகுதி தேர்வின் 2ம் தாள் தேர்வு நடைபெற்றது.
இந்தத் தேர்வின் முடிவுகள் நேற்று மாலை வெளியிடப்பட்டது. ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு மொத்தம் 4,01,986 பேர் பதிவு செய்திருந்த நிலையில், 2.54 லட்சம் பேர் மட்டுமே தேர்வு எழுதியுள்ளனர். அவர்களில் 2.50 லட்சம் பேரில் 20 ஆயிரத்திற்கும் குறைவான பட்டதாரி ஆசிரியர்களே தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆசிரியர் தகுதி தேர்வில் 98 சதவீதம் பட்டதாரி ஆசிரியர்கள் தோல்வி அடைந்திருப்பது கல்வியின் தரத்தையே கேள்விக்குறியாக்கி உள்ளதாக கல்வி ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.