பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி.. உடனே வந்த 108 : சிசுவின் தலை வெளியே வந்ததால் பதற்றம்.. கண்முன்னே வந்த கடவுள்!

Author: Udayachandran RadhaKrishnan
29 March 2023, 2:15 pm

கோவை அன்னூர் அருகே வீட்டில் அவசர நிலையில் கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம் பார்த்து ஆம்புலன்ஸ் பணியாளர்களை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

கோவை மாவட்டம் அன்னூர் வாகனகொம்பு பகுதியை சேர்ந்தவர் கோகுல் பிராசாந்த். இவரின் மனைவி வினோதினி (20). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று மாலை வீட்டில் இருக்கும்பொழுது பிரசவ வலி ஏற்பட்டது.

இதுதொடர்பாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறுமுகை ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து சென்ற ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வீட்டிற்கு சென்று பார்த்த போது குழந்தையின் தலை வெளியே வந்திருந்தது.

இதையடுத்து ஆம்புலன்ஸ் மருத்துவ நிபுணர் தினேஷ், பைலட் நந்தகோபால் உதவியுடன் பிரசவம் பார்த்தனர். அப்போது அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

இதையடுத்து மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக தாய் சேய் இருவரையும் சேர்த்தனர்.

அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இருவரும் நலமுடன் இருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து அவசரம் கருதி பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றன்றனர்.

  • Vikram to play villain in Marco sequel வெயிட்டான வில்லன் ரோலில் விக்ரம்…மலையாள சினிமாவிற்கு சர்ப்ரைஸ் கொடுத்த பிரபல இயக்குனர்..!
  • Views: - 519

    0

    0