டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வில் முறைகேடு… அண்ணாமலைக்கு தமிழக அரசு பதில் சொல்லியே ஆகனும் : கரு.நாகராஜன் பரபரப்பு பேச்சு!!

Author: Babu Lakshmanan
29 March 2023, 3:55 pm

சென்னை : தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறை சீர்கேட்டிருக்கிறது எனவும், இந்தியாவிலேயே கல்வி அடிப்படையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை 27வது இடத்தில் உள்ளதாக பாஜக மாநிலத் துணைத் தலைவர் கரு நாகராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தமிழக பாஜக மாநில கல்வியாளர் பிரிவின் மாநில செயற்குழுகூட்டம் நடைபெற்றது. பாஜக மாநில கல்வியாளர் பிரிவின் தலைவர் தங்க கணேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த செயற்குழு கூட்டத்தில் பாஜக மாநிலத் துணைத் தலைவர் கரு நாகராஜன் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில துணைத்தலைவர் கரு நாகராஜன் கூறியதாவது:- பாஜகவின் உடைய முக்கிய பிரிவான கல்வியாளர் பிரிவில் மாநில செயற்குழு பயிற்சி முகாம் தற்போது நடைபெற்று இருக்கிறது இதில் சிறப்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. மெட்ரிகுலேஷன் பள்ளிகளை நடத்தும் உரிமத்தை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பித்தால் போதும் என்று அதிமுக ஆட்சி காலத்தில் இருந்தே இருந்தது. ஆனால் தற்போதைய திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என்பதை மாற்றி ஒரு ஆண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும் என்பது மிகப்பெரிய மோசடி.

உரிமத்தை புதுப்பிக்கும் தவணையை மூன்று வருடங்களுக்கு ஒரு முறை என்பதை ஒரு வருடத்திற்கு ஒரு முறை என மாற்ற வேண்டியது அவசியம் என்ன என கேள்வி எழுப்பினார்.

இவ்வாறு ஆண்டுக்கு ஒருமுறை நடத்துனர் உரிமத்தை புதுப்பிக்க வேண்டும் என கூறுவது பள்ளியை நடத்துகிறவர்களைய வஞ்சிக்க கூடிய செயலாக உள்ளதாகவும் மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி உரிமையாளர்களின் நலன் கருதி அவர்களது கல்வி சேவைக்கு வடையூரு செய்யாமல் மூன்று ஆண்டுக்கு ஒரு முறை உரிமத்தை புதுப்பிக்க்கும் முறையை கொண்டு வர வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்தார்.

அரசு அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றுகிற கௌரவ பேராசிரியர்களை ஆட்சிக்கு வந்தால் நிரந்தரமாக பணிய அமர்த்துவோம் என கூறிவிட்டு தற்போது வரை அதை நிறைவேற்றவில்லை. இவர்களை நிரந்தர பணியாளர்களாக பணியமர்த்தப்பட வேண்டும் எனவும் அதேபோல பகுதி நேர விரிவுரையாளர்களும் தொழில்நுட்ப ஆசிரியர்களையும் நிரந்தர பணியாளர்களாக பணியமர்த்தப்பட வேண்டும் எனவும் கூறினார்.

எஸ்சி எஸ்டி மாணவ மாணவிகளுக்கு பயன் தரக்கூடிய நவோதயா பள்ளியை திறக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்ததோடு மேலும் புதிய கல்விக் கொள்கையை முழுமையாக ஏற்றுக் கொண்டால் தமிழ்நாட்டிற்கும் தமிழக மாணவர்களுக்கும் நன்மை பயக்கும் என கூறினார். பாஜக நாகை மாவட்ட தலைவர் மணிகண்டன் மீது அப்பகுதி காவலாளர்கள் பொய் வழக்கு போட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறை சீர்கேட்டிருக்கிறது எனவும் இந்தியாவிலேயே கல்வி அடிப்படையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை 27-வது இடத்தில் உள்ளதாகவும் கூறிய அவர் பள்ளி கல்வித்துறையினுடைய உள்கட்டமைப்புக்கு எத்தனை கோடி ரூபாய் என்றாலும் மத்திய அரசாங்கம் செலவிட தயாராக உள்ளதாக தெரிவித்தார்.

ஆன்லைன் ரம்மி தொடர்பாக மேலும் ஒருவர் உயிரிழந்தது குறித்ததான கேள்விக்கு, ஆன்லைன் தம்மியை தடை செய்ய வேண்டும் என்று முதல் அறிக்கையை தமிழகத்தில் கொடுத்தது பாஜக தலைவர் அண்ணாமலை தான் எனவும் அதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை எனவும் கவர்னர் ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை பரிசீலனை செய்து சட்ட விதிகளை ஆராய்ந்து ஆன்லைன் ரம்மிக்கு தடை கொண்டு வர வேண்டும் என்பது எங்களுடைய கோரிக்கையாக உள்ளதாக கூறினார்.

மேலும் டிஎன்பிஎஸ்சி முறைகேடு குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விடுத்த அறிக்கைக்கு தமிழக அரசு எந்தவித பதிலும் கூறவில்லை எனவும் தமிழக அரசு இதற்கு கண்டிப்பாக பதில் கூற வேண்டும் எனவும் கூறினார்.

  • Atlee’s Bollywood Production Updates ஒற்றைக்காலில் அடம் பிடிக்கும் அட்லீ…மீண்டும் பாலிவுட் படமா..!
  • Views: - 414

    0

    0