‘பணம் கொடு பட்டா தரேன்’… லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலர்… ஆடியோ ஆதாரத்துடன் தாசில்தாரிடம் தொழிலதிபர் பரபரப்பு புகார்!!

Author: Babu Lakshmanan
29 March 2023, 5:57 pm

தூத்துக்குடி அருகே கிராம நிர்வாக அலுவலர் தனிப்பட்டா பெறுவதற்காக கையெழுத்திட லஞ்சம் கேட்பதாக தொழில் அதிபர் ஆடியோ ஆதாரத்துடன் ஸ்ரீவைகுண்டம் தாசில்தாரிடம் புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த தொழிலதிபர் சுபாஷூக்கு சொந்தமான இடம் ஆதிச்சநல்லூர் வருவாய் கிராமத்தில் உள்ளது. இந்த இடம் கூட்டு பட்டாவில் இருப்பதால் தனிப்பட்டா கேட்டு சுபாஷ் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மனு அளித்துள்ளார்.+

இந்த நிலையில், ஆதிச்சநல்லூர் கிராம நிர்வாக அலுவலர் சங்கர் கணேஷ் என்பவர் உரிய ஆவணங்கள் இருந்தும் தனிப்பட்டா வழங்க லஞ்சம் கேட்பதாக ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் ராதாகிருஷ்ணனிடம் இன்று சுபாஷ் ஆடியோ ஆதாரத்துடன் புகார் மனு அளித்தார்.

அந்த மனுவில், பணம் தந்தால் மட்டுமே தனிப்பட்டா வழங்குவேன் எனக் கூறி, அந்த மனு மீது நடவடிக்கை எடுக்க காலதாமதம் ஏற்படுத்துவதுடன், மன உளைச்சலையும் ஏற்படுத்தியதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் சுபாஷ் குறிப்பிட்டுள்ளார்.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…