SPB குரலை நீக்கினாரா நடிகர் விஜய்? கோபத்தில் கொந்தளித்த சம்பவம்.. அப்படி என்ன நடந்தது?..
Author: Vignesh29 March 2023, 7:00 pm
தமிழ் சினிமாவின் நடிகர் விஜய் முக்கிய நடிகராக வளர்ந்து வந்த காலகட்டத்திலேயே அவர் தனது சொந்த குரலில் பல பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்து வந்தார். இது மட்டும் இல்லாமல் விஜய் அவரது சொந்த குரலில் பாடிய அனைத்து பாடல்களுமே மாபெரும் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, பல முன்னணி பாடகர்கள் விஜய்காக பாடல்களை பாடி உள்ளார்கள். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், எஸ்.பி.பாலசுப்ரமணியம், “என்ன அழகு எத்தனை அழகு”, “ஆழகூரில் பூத்தவளே” போன்ற பல பாடல்களை விஜய்காக பாடி இருக்கிறார்.
சில வருடங்களுக்கு முன்னதாக எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஒரு பேட்டியில் பங்கேற்ற போது ரசிகை ஒருவர் அவரிடம், “நடிகர் விஜய்க்கு நீங்கள் பாடிய பாடல், அவருக்கு பொருத்தமாக இல்லை என்ற காரணத்தை சொல்லி அதனை நீக்கிவிட்டார் என்று கூறப்படுகிறது இது உண்மையா?” என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த பாடகர் எஸ்.பி.பி., “தன்னிடம் இதற்கு முன் இந்த கேள்விகளை சிலர் கேட்டதாகவும், ஆனால் அது உண்மையா இல்லையா என்று தனக்கே தெரியாது எனவும், அப்படி நடந்திருந்தால், விஜய் இதை செய்து இருந்தால், மிகவும் கண்டிக்கவேண்டிய விஷயம் என்றும், அவர் நிச்சயமாக இதனை செய்திருக்க கூடாது” என தெரிவித்திருந்தார்.
மேலும் அந்த பேட்டியில் பேசிய எஸ்.பி.பி., “விஜய் நடிக்க வந்த புதிதில் கொஞ்சம் சிறுவயதில் இருக்கும்போதே தான் அவருக்கு பாடி இருந்ததாகவும், அப்போதே பொருத்தமாக இருந்த குரல், இப்போ அவருக்கும் வயசாகிட்டு வருதே, இப்போ பொருந்தலைன்னு எப்படி சொல்லமுடியும் எனவும், அப்படி அவர் நினைத்திருந்தால் மிகவும் தவறு என வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.
விஜய் ஒரு நல்ல நாகரீகமான மனிதர், அவர் இப்படி செய்திருப்பார் என்று தான் எண்ணவில்லை என்றும், ஒருவேளை அவர் அப்படி செய்திருந்தால் கண்டிக்கத்தக்கது என கடுமையாக தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.