அஜித்துக்கு போன் செய்த எடப்பாடி பழனிசாமி : அடுத்த நிமிடமே வந்த வாழ்த்து!!

Author: Udayachandran RadhaKrishnan
30 March 2023, 11:18 am

அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச் செயலாளர் குறித்த வழக்கு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு சாதகமாக முடிந்தது.

இதையடுத்து இடைக்கால பொதுச் செயலாளர் பதவியில் இருந்த எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் பதவி ஏற்றுக்கொண்டார் என்பதும், அவருக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளராக பதவி ஏற்றுக்கொண்ட எடப்பாடி பழனிசாமிக்கு நடிகர் அஜித் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் அஜித்தின் தந்தை காலமானபோது தொலைபேசியில் எடப்பாடி பழனிச்சாமி ஆறுதல் தெரிவித்த நிலையில் அஜித் வாழ்த்து கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • SAWADEEKA song meaning அட”SAWADEEKA”அர்த்தம் இதுதானா…பங்கம் செய்துள்ள அனிருத்…செம VIBE-ல் அஜித் ரசிகர்கள்..!
  • Views: - 399

    0

    0