சிம்பு நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் பத்து தல. கிருஷ்ணா இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் சிம்பு கௌதம் கார்த்திக் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள்நடித்துள்ளனர். மணல் மாஃபியாவை மையமாக வைத்து உருவாகி உள்ள இப்படத்தில் சிம்பு ஏஜிஆர் என்கிற டான் கேரக்டரில் நடித்துள்ளார்.
தமிழகம் முழுக்க சுமார் 450-க்கும் மேற்பட்ட திரைகளில் இப்படம் வெளியிடப்பட்டுள்ளது. சிம்பு ரசிகர்கள் இப்படத்தை மாபெரும் ஹிட் படமாக்கவேண்டும் என்பதற்காக காலையிலேயே தியேட்டர் முன் குவிந்து பட்டாசு வெடித்து, பால் அபிஷேகம் செய்து , மேள தாளகளுடன் இப்படத்தின் ரிலீசை கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், “பத்து தல” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சிம்பு மிகவும் உணர்ச்சிகரமாக பேசினார். அவரது பேச்சு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. எனினும் சிம்பு பேசும்போது அவருக்கு எதிராக சதி நடப்பது போன்ற தோரனையிலேயே பேசுகிறார் என்றும் அப்போது கூறப்பட்டு வந்தது.
இதனிடையே, பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணனிடம் நேயர் ஒருவர், “நடிகர் சிம்பு குறித்து ஒரு கேள்வியை எழுப்பினார் அதில், ஒவ்வொரு விழா மேடைகளிலும் தன்னை யாரோ சூழ்ச்சி செய்து வளரவிடாமல் செய்கிறார்கள் என்பது போல் சிம்பு பேசுகிறார் என்றும், அது உண்மையாகவே கோலிவுட்டில் யாராவது அப்படி நினைக்கிறார்களா? இல்லை அவராகவே அனுதாபம் வர வேண்டும் என்று பேசுகிறாரா? என்று ஒரு கேள்வி எழுப்பி இருந்தார்.
அதற்கு பதிலளித்த சித்ரா லட்சுமணன், “சிம்புவுக்கு எதிராக இந்திய சினிமா உலகிலே யாரும் சதி செய்வதாக தனக்கு தெரியவில்லை என்றும், அது ஒரு பிரமை என்றுதான் தோன்றுகிறது எனவும், சிம்பு ஒரு மிகச்சிறந்த நடிகர் என்றும், அவரிடம் இருக்கும் சின்ன சின்ன குறைகள் எல்லாம் அவருக்கே நன்றாக தெரியும் எனவும், அதை சிம்பு முழுவதுமாக கலைந்துவிட்டார் என்றால் அவரது இமாலய வெற்றியை யாராலும் தடுக்கமுடியாது” என்று வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.