கலாஷேத்ரா கல்லூரி பேராசிரியர்கள் மீது பாலியல் புகார்.. விசாரணையில் மறுப்பு தெரிவித்த மாணவிகள் திடீர் போராட்டம்!

Author: Udayachandran RadhaKrishnan
30 March 2023, 6:20 pm

சென்னை அடையாறு கலாஷேத்ரா கல்லூரியில் பேராசிரியர் ஒருவர், மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக சமூக வலைதளங்களில் செய்தி வைரலானது.

இதுதொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தனது சமூக வலைதளப் பக்கம் மூலமாக தமிழக டிஜிபி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டது.

பின்னர் பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்பட்ட கலாஷேத்ரா கல்லூரி மாணவி, தன் பெயரைக் களங்கப்படுத்தும் வகையில் சிலர் பொய்யாக பாலியல் புகாரை சமூக வலைதளங்களில் பரப்பி வருவதாகவும், அது போன்று எந்த சம்பவமும் நிகழவில்லை என்றும், அவதூறு பரப்பிவரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இதுகுறித்து அடையாறு அனைத்து மகளிர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தேசிய மகளிர் ஆணையம் திடீரென தமிழக டிஜிபிக்கு அனுப்பிய புகாரை திரும்பப்பெற்றது.

மேலும் பாதிக்கப்பட்ட மாணவி தன் பெயரில் பொய்யான புகார் சமூக வலைதளத்தில் பரவுவதாக தெரிவித்த காரணத்தினால் தமிழக போலீஸார் விசாரிக்கும் படி கூறியதை வாபஸ் பெற்றதாக தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்தது.

இந்நிலையில் அடையாறு கலாஷேத்ராவில் தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா ஷர்மா நேற்று மூன்று மணி்நேரம் ரகசியமாக விசாரணை நடத்திச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எந்தவித முன்னறிவிப்பும் இன்றி தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா ஷர்மா அடையாறு கலாஷேத்ராவில் உள்ள மாணவர்கள் மற்றும் மாணவிகளிடம் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.

பாஜகவின் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நடிகை குஷ்பு நியமிக்கப்பட்ட பிறகு, அவர் தொடர்புடைய மாநிலத்தில் தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா ஷர்மா, உறுப்பினர் குஷ்புவை உடன் அழைத்துச் செல்லாமல் ரகசியமாக விசாரணை நடத்தியது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

இந்த நிலையில் விசாரணை நடத்தப்பட்ட போது பாலியல் புகார் எதுவும் இல்லை என நிரூபணமாகியுள்ளது. ஆனால் கல்லூரி வளாகத்தில் இன்று மாணவிகள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

ஆணையம் விசாரணை நடத்திய போது கல்லூரி நிர்வாகிகள், ஆசிரியர்கள் உடனிருந்ததால் மாணவிகளால் வெளிப்படையாக குற்றத்தை கூற முடியவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் இன்று கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக 4 பேராசிரியர்கள் மீது புகார் கொடுத்துள்ள மாணவிகள், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், #WEWANTJUSTICE என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

  • Keerthy Suresh Too much Glamour in Baby John Movie ‘காட்டு கவர்ச்சி’ காட்டிய கீர்த்தி சுரேஷ்.. பாலிவுட்டுக்கு போனா மட்டும் தாராளமா?
  • Views: - 488

    0

    0