அட, இது நம்ம நாடாளுமன்றமா..? பிரமிக்க வைக்கும் புதிய நாடாளுமன்ற கட்டிடம்… பிரதமர் மோடி திடீர் ஆய்வு..!!
Author: Babu Lakshmanan30 March 2023, 8:04 pm
மத்திய அரசு கட்டி வரும் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியாவின் தற்போதைய நாடாளுமன்ற கட்டிடம் 100 ஆண்டுகள் பழமையானது. மாநிலங்களின் உருவாக்கம் காரணமாக எம்பிக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால், தற்போதைய நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் அமருவது அவ்வளவு எளிதான காரியமல்ல என்று மத்திய அரசு கருதுகிறது.
எனவே, ராஜபாதை சீரமைப்பு மற்றும் குடியரசு துணை தலைவர் இல்லம், பிரதமர் இல்லம் உள்ளிட்ட புதிய கட்டுமானங்கள் அடங்கிய சென்டிரல் விஸ்டா திட்டத்தின் ஒரு அங்கமாக புதிய நாடாளுமன்றம் கட்ட மத்திய அரசு திட்டமிட்டது. அதன்படி, அதற்கான நிதி ஒதுக்கப்பட்டு, புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் வரைபடத்தையும் வெளியிட்டது.
இதைத் தொடர்ந்து, கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இதற்கான அடிக்கல்லை பிரதமர் மோடி நாட்டினார். தொடர்ந்து கட்டுமானப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றது. 2023ம் ஆண்டில் நாடாளுமன்ற புதிய கட்டிடம் திறக்கப்படும் என்று கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திடீரென ஆய்வு செய்தார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.