கோவை அரசு மருத்துவமனைக்கு செல்வோரின் கவனத்திற்கு… இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்.. வெளியான முக்கிய அறிவிப்பு

Author: Babu Lakshmanan
1 April 2023, 10:48 am

கோவை : கோவை அரசு மருத்துவமனையில் முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டுள்ளது.

மக்கள் கொரோனா வைரஸ் உடன் வாழ தொடங்கி விட்டனர். உலக இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில், மீண்டும் மீண்டும் புதுப்புது கொரோனா வைரஸ் நோய்கள் உருவாகி வருகின்றன. இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மீண்டும் தீவிரமடைந்து உள்ள நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைளில், மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, மருத்துவமனைகளுக்கு வரும் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கோவை அரசு மருத்துவமனையில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருபவர்கள் உடன் வருபவர்கள் உள்நோயாளிகள், புறநோயாளிகள், டாக்டர்கள் என அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும், என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், மருத்துவமனை ஆங்காங்கே முகக்கவசம் அணிய வேண்டும் என நோட்டிஸ்கள் ஒட்டப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

  • AI-generated Nayanthara video அட இது நல்லா இருக்கே…இரண்டு பெண் குழந்தைகளுடன் ‘நயன்தாரா’… வைரலான கியூட் வீடியோ.!