தமிழகத்தில் ஆட்சியமைப்பது தான் சமத்துவ மக்கள் கட்சியின் நோக்கம் : ஆட்சியை பிடிக்கும் வழி இதுதான்.. அடித்து சொல்லும் சரத்குமார்!!

Author: Babu Lakshmanan
1 April 2023, 12:40 pm

நாகர்கோவில் : தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது தான் சமத்துவ மக்கள் கட்சியின் நோக்கம் என்றும், அதற்காக கட்சி நிர்வாகத்தை தொடர்ந்து சீர்படுத்தி வருவதாக அக்கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியின் 130 வது ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நேற்று நாகர்கோவில் வந்தார். முன்னதாக, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:- தமிழகத்தின் ஆட்சி அமைப்பது தான் சமத்துவ மக்கள் கட்சியின் நோக்கம். எந்த ஒரு இயக்கமாக இருந்தாலும் மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தி ஆட்சியாளர்களுக்கு குறைகளை எடுத்துக் கூறி வருவது இயல்பு.

அதைத்தான் சமத்துவ மக்கள் கட்சி செய்து வருகிறது. இந்த கட்சி துவங்கியதில் இருந்து மக்கள் பிரச்சனைக்கு தீர்வு காணபல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக கட்சி நிர்வாகத்தை பலப்படுத்தி வருகிறது. மக்களுக்கு சேவை செய்தால் நிச்சயம் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.தமிழகத்தில் இளைஞர்களிடையே போதைப்பழக்கம் அதிகரித்துள்ளது யாராலும் மறக்க முடியாது. இதை தடுக்க அரசு தனிப்படை அமைத்து போதுமான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

சமீப நாட்களாக மாணவர்களை சீரழித்து அவர்களை மூளை செலவு செய்து போதைப் பழக்கத்தில் ஆளாக்கும் செயல்கள் நடந்து வருகின்றன. இவற்றை காவல்துறை கண்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக காவல்துறை இந்தியாவிலேயே சிறப்பான காவல்துறை என்ற பெயர் பெற்றது. தமிழகத்தில் சட்டமூலங்கு பிரச்சனைகளில் காவல்துறை அதிக கவனம் செலுத்தி வருகிறது.

பெரிய அளவில் மத கலவரங்கள் போன்ற சமூகப் பிரச்சினைகளால் பாதிப்புகள் ஏற்பட்டால்தான், அது சட்ட ஒழுங்கு பிரச்சனையாக கருத முடியும் தமிழகத்தை பொறுத்தவரை அப்படி இல்லை. வருகிற பாராளுமன்ற தேர்தலை பொருத்தவரை கூட்டணி எந்த கட்சி என்று கேட்பதை விட எத்தனை சீட்டுகள் சமத்துவ மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்படும் என்ற கேள்வியை முக்கியமாக கருதி வருகிறோம், என்று அவர் கூறினார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ