வாழ்க்கையும் போச்சு.. சினிமாவும் போச்சு?.. தற்கொலைக்கு முயன்ற ரம்யா ஸ்பந்தனா..!

Author: Vignesh
1 ஏப்ரல் 2023, 4:00 மணி
simbu
Quick Share

நடிகை ரம்யா என்ற திவ்யா ஸ்பாந்தனா கன்னட சூப்பர் ஸ்டாரான புனீத் ராஜ்குமாரின் ‘அபி’ என்ற படம் மூலம் சினிமாவில் அடியெடுத்து வந்தார்.

இதன் பிறகு 2004ம் ஆண்டு தமிழ் சினிமாவில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான குத்து படத்தில் அறிமுகமானார். இதனையடுத்து, கிரி, பொல்லாதவன், தூண்டில், வாரணம் ஆயிரம் உட்பட பல படங்களில் நடித்தார்.

divya  spandana -updatenews360

இதன் பிறகு 2012ம் ஆண்டு அரசியலில் குதித்த ரம்யா காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். கர்நாடக மாநிலத்தில் மாண்டியா தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யானார். 2017ம் ஆண்டு காங்கிரஸின் சோஷியல் மீடியா பிரிவின் தேசிய தலைவரானார் திவ்யா ஸ்பாந்தனா.

இந்நிலையில், சமீபத்தில் Weekend with Ramesh நிகழ்ச்சியின் 5வது சீசனில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திவ்யா ஸ்பாந்தனா நிகழ்ச்சியில் பல தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில்,

தன் தந்தை ஆர்.டி. நாராயண் இறந்து 2 வாரங்களிலேயே தான் நாடாளுமன்றத்திற்கு சென்றதாகவும், நாடாளுமன்றத்தில் தனக்கு யாரையும் தெரியாது என்றும், எல்லாமே புதுசா இருந்ததாகவும், ஆனால், தான் அனைத்தையும் சீக்கிரமாக கற்றுக்கொண்டதாகவும், தன் துக்கத்தையும் தாண்டி தான் கடுமையாக உழைத்ததாகவும், கவனமும் செலுத்தி மாண்டியா தொகுதி மக்கள் தான் தனக்கு நம்பிக்கை கொடுத்தார்கள் என்று தெரிவித்துள்ளார்.

divya spandana -updatenews360

தன் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தையும், தாக்கத்தையும் ஏற்படுத்திய தன் அம்மா, 2-வது தன் அப்பா. 3வது ராகுல் காந்தி. தன் தந்தை உயிரிழந்தபோது, தான் மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டு, தற்கொலை கூட செய்து கொள்ளலாமா என்று கூட நினைத்ததாகவும், தேர்தலிலும் தோல்வி அடைந்த போது, அது மிகவும் மோசமான காலக்கட்டம் என்றும், தன் எண்ணத்திலும், மனதிலும் வெறும் கவலை மட்டும் தான் இருந்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும், அந்நேரத்தில் ராகுல் காந்திதான் தனக்கு உதவியாக இருந்ததாகவும், நிறைய உதவி செய்தார் என்றும், எமோஷனலாகவும், ஆதரவாகவும் இருந்தார் எனவும், நிறைய நம்பிக்கை கொடுத்தார் என்றார்.

divya spandana -updatenews360

தற்போது இது தொடர்பான தகவல் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலான நிலையில், இதைப் பார்த்த திவ்யா ஸ்பாந்தனாவின் ரசிகர்கள் வாழ்க்கையில் எந்த பிரச்சினை வந்தாலும், தற்கொலை செய்து கொள்ள நினைக்கக் கூடாது என்றும், நீங்கள் மிகவும், தைரியமானவர் என்பதை மறந்துவிட வேண்டாம் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

  • Woman Aghori ஒட்டுத் துணியில்லாமல் கோவிலுக்குள் நுழைந்த பெண் அகோரி… அனுமதி மறுப்பால் தீக்குளிக்க முயற்சி!
  • Views: - 668

    2

    0