தமிழ்நாட்டில் உதயமாகும் 8 மாவட்டங்கள்? பட்டியலிட்டு பேரவையில் அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்!!
Author: Udayachandran RadhaKrishnan1 April 2023, 1:59 pm
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறையின் மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெறும்.
அந்த வகையில் இன்று பொதுப்பணி நெடுஞ்சாலைத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.
அப்போது கேள்வி நேரத்தில், ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கோரிக்கை விடுத்தார்.
அதேபோல், கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என அரசு கொறடா கோவி செழியனும், ஏற்கனவே அன்புமணி ராமதாஸ் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
இதற்கு பதிலளித்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தமிழ்நாடு முழுவதும் புதிதாக 8 மாவட்டங்களை உருவாக்குவதற்கு எம்எல்ஏக்கள் மற்றும் எம்.பி.க்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 8 மாவட்டங்களை பிரிப்பதற்கு ஆலோசனையில் உள்ளோம். இது தொடர்பாக முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று நிதி நிலைமைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்துள்ளார்.