விருது விழாவுக்கு கூப்பிட்டு அசிங்கப்படுத்துறாங்க… எல்லாத்துக்கும் காரணம் “பீஸ்ட்” FLOP!

Author: Shree
1 April 2023, 7:08 pm

தமிழ் சினிமாவில் என்னதான் பெரிய ஹீரோக்கள் வச்சி படம் எடுத்தாலும் அது தோல்வி அடைந்துவிட்டால் யாரும் இயக்குனரை பெரிதாக மதிக்கமாட்டார்கள். அப்படி ஒரு சம்பவம் தான் இயக்குனர் நெல்சன் திலீப் குமாருக்கு தற்போது நடந்துள்ளது.

இயக்குனரும், திரைக்கதை எழுத்தாளரும் ஆன நெல்சன் கோலமாவு கோகிலா படத்தை இயக்கி ஹிட் கொடுத்தார் அந்த படத்திற்கு பின்னர் தமிழ் சினிமாவின் பார்வை அவர் மீது விழுந்தது. இதையடடுத்து சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை இயக்கி பிளாக் பஸ்டர் கொடுத்தார்.

அதன் பின்னர் விஜய்யை வைத்து பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் பீஸ்ட் படத்தை இயக்கி பெரும் தோல்வியை கொடுத்தார். இந்நிலையில் தற்போது தனியார் ஊடகம் வழங்கிய விருது விழாவிற்கு சென்ற நெல்சன் அங்கு அசிங்கப்படுத்தப்பட்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி தீயாக பரவி வருகிறது.

அந்நிகழ்ச்சிக்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வரும் போது பவுன்சர்கள் சூழ அணிவகுத்து வரவேற்கப்பட்டார். ஆனால் நெல்சன் மற்றும் கிங்ஸ்லி வரும் போது அங்கு யாரும் அவர்களை கண்டுகொள்ளவிலை. இதனால் மிகவும் அசிங்கப்பட்டு தலைகுனிந்தபடி சென்றுள்ள வீடியோவை ரசிகர்கள் ஷேர் செய்து “ஜெயிலர் படம் வெளியாகட்டும்” பாடம் புகட்டுவோம் அப்போ இருக்கு இவங்களுக்கு என கூறியுள்ளனர். நெல்சன் ரஜினியை வைத்து ஜெயிலர் படத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

  • Kayadu Lohar Visit Kalahasti Temple Crowd Gathered பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!