மிட்டாய் திருடியதற்காக பழங்குடியின மாணவர்களை கட்டி வைத்து அடித்து சித்ரவதை : அதிர்ச்சி சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
1 April 2023, 9:46 pm

பெட்டிக்கடையில் மிட்டாய் திருடியதற்காக பழங்குடி மாணவர்களை கட்டி வைத்து அடித்த சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மதுரை மாவட்டம் திருமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அச்சம்பட்டி மேல்நிலைப் பள்ளியில் ஆதிதிராவிட நலத்துறை விடுதியில் பழங்குடியின மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் விடுதியில் உள்ள இரண்டு பழங்குடியின மானவர்கள் ஆலம்பட்டி கிராமத்தில் உள்ள பெட்டிக்கடையில் மிட்டாய் திருடியதற்காக ஊர் மக்கள் பொதுவெளியில் இரண்டு மாணவர்களை கட்டி வைத்து அடித்துள்ளனர்.

தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் பொதுமக்களிடமிருந்து மாணவர்களை மீட்டு பள்ளி நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர்.
இதை அடுத்து ஆதிதிராவிடர் நலத்துறை விடுதியில் இருந்து மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

இதை அடுத்து மாணவர்களின் பெற்றோர்கள் மாணவர்களை வீட்டிற்கு அழைத்து சென்று விட்டார்கள்.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!