நயன்தாராவின் சாம்ராஜ்யத்தை சமாதி கட்டிய பிரபல நடிகை – இனிமே நான் தான் டாப்பு!

Author: Shree
2 April 2023, 10:02 am

மலையாள குடும்பத்தை சேர்ந்தவரான நடிகை நயன்தாரா தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகனார், கான் பின்னர் சந்திரமுகி திரைப்படம் மூலம் பிரபலமானார். பின்னர் தொடர்ந்து சில சறுக்கலை சந்தித்தபின் அவரை தூக்கி உச்சத்தில் அமர வைத்த திரைப்படம் பில்லா. அப்படத்தில் பிகினி உடையில் கவர்ச்சி தெறிக்க கிளாமர் காட்டி சொக்கி இழுத்தார்.

பின்னர் சொந்த வாழ்க்கையில் காதல், ஏமாற்றம், பட வாய்ப்பு இல்லாமை என இருந்து வந்த நயன்தாராவுக்கு மீண்டும் ஒரு ஹிட் கொடுத்த திரைப்படம் நானும் ரவுடி தான். அப்படத்தில் காது கேளாத பெண்ணாக சிறப்பாக நடித்திருந்தார். அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வந்த நயன்தாரா திருமணத்திற்கு பின்னர் தொடர் தோல்வி சந்தித்து மார்க்கெட் இழந்துள்ளார். இந்த சமயத்தில் திரிஷா போன்ற பெரிய நடிகைகள் சிலர் கடின உழைப்பின் மூலம் அடுத்தடுத்த வெற்றி படங்களில் நடித்து மார்க்கெட் உயர்திக்கொண்டுள்ளனர்.

அந்தவகையில் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் நயன்தாராவின் இடத்தையே டோட்டலாக காலி செய்ய திட்டமிட்டு நடித்து வருகிறாராம். சமீபத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான “தி கிரேட் இந்தியன் கிச்சன்” படம் நல்ல விமர்சனத்தை பெற்று வசூல் குவித்தது.

மேலும் நடிப்பில் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி அன்று ரிலீஸ் ஆக இருக்கும் ‘சொப்பன சுந்தரி’ அந்த படம் முழுக்க முழுக்க கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாக அமைந்துள்ளது. குறிப்பாக காமெடி ஜானரில் அப்படம் உருவாகியுள்ளதால் நிச்சயம் பிளாக் பஸ்டர் ஹிட் அடிக்கும் என்கின்றது கோலிவுட் வட்டாரம். ஆக நயன்தாராவின் லேடி சூப்பர் ஸ்டார் பெருமையை அடியோடு அழிக்கப்போகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…