சென்னை எல்ஐசி கட்டிடத்தில் திடீர் தீ விபத்து : 12வது மாடியில் எரியும் தீ.. வைரலாகும் ஷாக் வீடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
2 April 2023, 7:03 pm

சென்னை அண்ணா சாலையில் எல்.ஐ.சி. கட்டிடம் உள்ளது. சென்னையின் அடையாளங்கள் இதுவும் ஒன்றாகும். இந்நிலையில் சென்னை எல்.ஐ.சி. கட்டிடத்தில் தற்போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எல்.ஐ.சி. கட்டிடத்தின் மேல் தளத்தில் 12-வது மாடியில் இன்று மாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, தீயணைப்பு படையினர் விரைந்து சென்று கட்டிடத்தில் பிடித்த தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தீவிபத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தற்போதுவரை தகவல் வெளியாகவில்லை. சென்னை எல்.ஐ.சி. கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • ajith-sir-gives-the-title-good-bad-ugly-said-by-adhik-ravichandran டைட்டில் வச்சதே அஜித்சார்தான்- ஆச்சரிய தகவலை பகிர்ந்த ஆதிக் ரவிச்சந்திரன்