ராஷ்மிகா நடனமாடும் போது செருப்பு கழட்டி எறிந்த ஆலியா பட் – அம்பானி விழா வீடியோ!
Author: Shree2 April 2023, 9:33 pm
நீடா முகேஷ் அம்பானியின் கல்சுரல் சென்டரின் பிரமாண்டமான திறப்பு விழா நேற்று நடைபெற்றது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பந்த்ரா-குர்லா காம்ப்ளெக்ஸில் உள்ள ஜியோ குளோபல் மையத்தில் நடைபெற்ற இவ்விழாவில் திரைப்பிரபலங்கள் பலரும் கலந்துக்கொண்டனர்.
நீடா அம்பானியின் கனவுத் திட்டமான இவ்விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதனையடுத்து 3 நாட்கள் பல்வேறு நிகழ்வுகள் நடைபெறவிருக்கின்றன. இந்நிலையில் இந்த விழாவில் நடிகைகள் ராஷ்மிகா மந்தனா மற்றும் ஆலியா பட் இருவரும் இணைந்து “நாட்டு கூத்து” பாடலுக்கு குத்தாட்டம் ஆடினர்.
அதில் ஆலியா பட் மேடை ஏறியதும் காலில் அணிந்திருந்த செருப்பை கழட்டி எறிந்துவிட்டு பின்னர் புல் மூடில் ராஷ்மிகாவுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
https://www.instagram.com/p/CqhLX03pwhg/