தருமபுரியில் அடுத்தடுத்து அதிர்ச்சி.. மேலும் இரு காட்டு யானைகள் உயிரிழப்பு : ஒரே மாதத்தில் 6 யானைகள் பலியான சோகம்..!!
Author: Babu Lakshmanan3 April 2023, 4:04 pm
தருமபுரி : ஒகேனக்கல் வனப்பகுதியில் வெவ்வேறு இடங்களில் இரண்டு யானைகள் உயிரிழந்த சம்பவம் வன ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் அருகே வெவ்வேறு இடங்களில் இரண்டு காட்டு யானைகள் உயிரிழந்தது. இதில், போடூர் கிராமம் அருகே ஆண் யானை ஒன்று உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளது.
அதேபோல, கோடுபட்டி கிராமம் அருகே உள்ள வனப்பகுதியில் 10 வயதுள்ள பெண் யானை ஒன்று தண்ணீர் செல்லும் ஓடைகள் இருந்த சேற்றில் மாட்டிக்கொண்டு உயிரிழந்தது.
இதனை அறிந்த வனத்துறையினர் ஜேசிபி இயந்திரம் வரவழைக்கப்பட்டு யானையின் சடலத்தை மீட்கும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மேலும் மருத்துவக் குழுவினர் யானையை மீட்ட பின்பு பிரேத பரிசோதனை செய்வதற்காக தயாராக உள்ளனர்.
இன்று தர்மபுரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் இரண்டு காட்டு யானைகள் உயிரிழந்திருக்கின்றன. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஆறு யானைகள் உயிரிழந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.