சகஜமாகத்தான் பழகினேன்.. தப்பா எடுத்துக்கிட்டாங்க : தோழி வீட்டில் பதுங்கிய கலாஷேத்ரா பேராசிரியர் வாக்குமூலம்!

Author: Udayachandran RadhaKrishnan
3 April 2023, 4:18 pm

சகஜமாதத்தான் பழகினேன்.. அத தப்பா எடுத்துக்கிட்டாங்க : தோழி வீட்டில் பதுங்கிய கலாஷேத்ரா பேராசிரியர் வாக்குமூலம்!

சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் உள்ள பேராசிரியர் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பேராசிரியர் உள்ளிட்ட 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த விவகாரம் பெரும்விவாதம் ஆன நிலையில், முன்னாள் மாணவிகள் அளித்த பாலியல் புகாரில் கலாஷேத்ரா கல்லூரி பேராசிரியர் ஹரிபத்மன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மகளிர் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உட்பட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மாதவரத்தில் உள்ள தனது தோழியின் வீட்டில் பதுங்கியிருந்த ஹரி பத்மனை கைது செய்த நிலையில், அவரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், என்னை பற்றி புகார் கூறிய அனைத்து மாணவிகளிடமும் நான் சகஜமாக பழகினேன். நான் சகஜமாக பழகியதை தவறாக சித்தரித்து கூறுகின்றனர்.

மேலும், என்னை பற்றி புகார் கூறிய மாணவி வேறு காரணங்களுக்காக கல்லூரியை விட்டு வெளியேறியுள்ளார். அவரது குற்றச்சாட்டு உண்மையல்ல. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் கலாஷேத்ரா பாலியார் புகார் தொடர்பாக கல்லூரி மாணவிகள் கூறிய 4 பேராசிரியர்களும் டிஸ்மிஸ் செய்யப்பட்டு உள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் வாய் மொழியாக கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது.

  • Tamannaah Bhatia caravan incident கேரவனில் தமன்னாவுக்கு அப்படி..? கண்ணாடியைப் பார்த்த அந்த நொடி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!