பாஜக , காங்கிரஸ் இடையே மோதல் : காங்., கொடியை எரித்த பாஜகவினர்.. நாகர்கோவிலில் போலீஸ் குவிப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
3 April 2023, 7:50 pm

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் தண்டனை விதித்ததை தொடர்ந்து அவருடைய எம்பி பதவி பறிக்கப்பட்டது.

இந்நிலையில் இதனை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸார் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையில் இன்று நாகர்கோவிலில் இளைஞர் காங்கிரசார் 20-க்கும் மேற்பட்டோர் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்து பாஜகவினர் திரண்டு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களை அவர்கள் கொண்டுவந்த காங்கிரஸ் கொடிகளை கொண்டு அடித்து விரட்டினர்.

இந்நிலையில் அருகில் கிடந்த கற்களை மாறி மாறி எடுத்து வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் அந்த இடமே போர்க்களம் போல காட்சியளித்தது.

காங்கிரஸ் கொடிகளை பாஜகவினர் எரித்தனர். அதை தடுக்க வந்த போலீசாருக்கும் பாஜகவினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது தாக்குதலில் காயம்பட்ட இளைஞர் காங்கிரஸ் தேசிய பொதுசெயலாளர் லாரன்ஸ் மற்றும் பாஜக சக்திகேந்திரா கோட்ட பொருளாளர் கிருஷ்ணன் ஆகிய இருவர் 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் பாஜகவினர் நாகர்கோவில் – கன்னியாகுமரி சாலையில் நாகர்கோவில் எம்எல்ஏ எம்ஆர் காந்தி தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில் காங்கிரஸ் கட்சியினர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் அடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. நாகர்கோவிலில் பாஜக அலுவலகம் முன்பு நடந்த மோதல் குமரி மாவட்டத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி யுள்ளது

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்