கோவில் திருவிழாவில் விதிகளை மீறி அரைகுறை ஆடையுடன் ஆபாச நடனம் : கண்டுகொள்ளாத காவல்துறை!!

Author: Udayachandran RadhaKrishnan
4 April 2023, 12:58 pm

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பேரூராட்சி இப்பகுதியில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் நிலக்கோட்டை மையப் பகுதியில் மாரியம்மன் திருக்கோயில் உள்ளது திருக்கோயிலில் பங்குனி திருவிழா நடைபெற்று வருகிறது.

இத்திருவிழாவிற்கு நிலக்கோட்டை வத்தலகுண்டு திண்டுக்கல் தேனி மதுரை உசிலம்பட்டி ஆண்டிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று நிலக்கோட்டை பேரூராட்சி துணைத் தலைவர் முருகேசன் ஏற்பாட்டில் ஆடலும் பாடலும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் பெண்கள் குழந்தைகள் மாணவ மாணவிகள் என அனைவரும் ஆடலும் பாடலும் நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தன ஆடலும் பாடலும் நிகழ்ச்சியில் பெண்கள் ஆபாச உடையுடன் ஆராய் ட்ரவுசர் அணிந்து ஆபாச உடல் அசைவுடன் சினிமா பாடலுக்கு ஆடினர்.

இதை பார்த்துக் கொண்டிருந்த பெண்கள் முகம் சுழித்து அங்கிருந்து செல்லும் நிலை ஏற்பட்டது. அதேபோல் நீதிமன்றமும் பொதுமக்கள் கூடும் இடங்களில் கோயில் நிகழ்ச்சிகள் போன்ற பகுதிகளில் ஆபாச நடனங்கள் நடத்தக்கூடாது என்று உத்தரவு உள்ளது.

இந்நிலையில் ஆயிரக்கணக்கான ஆண்கள் பெண்கள் மாணவ மாணவிகள் குழந்தைகளை கூடும் கோயில் திருவிழாவில் பேரூராட்சி துறை தலைவர் ஏற்பாட்டில் ஆபாச நடனம் நடைபெற்றது.

அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது. அதேபோல் காவல்துறையினரும் கண்டுகொள்ளாது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியும் ஏற்படுத்தியது

  • Vijay Wish Good Bad ugly Teaser GOOD BAD UGLY டீசர்.. விஜய் சொன்ன நச் : படக்குழு உற்சாகம்!