தஞ்சையில் நிலக்கரி எடுக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்… நாளை முதலமைச்சரின் ரியாக்ஷனை பார்ப்பீங்க : உதயநிதி ஸ்டாலின் தடாலடி பேச்சு..!!

Author: Babu Lakshmanan
4 April 2023, 2:05 pm

தஞ்சை உள்ளிட்ட பகுதிகளில் நிலக்கரியை எடுக்க மத்திய அரசை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் என்எல்சி நிறுவனத்திற்கு சொந்தமான 3 நிலக்கரி சுரங்கத்தின் பெரும்பாலான பகுதி காவிரி படுகையை ஒட்டியே அமைந்துள்ளது. எஞ்சியுள்ள 6 நிலக்கரி சுரங்கங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தஞ்சை, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் நிலக்கரி எடுக்கவும், மொத்தம் 66 இடங்களில் ஆழ்துளையிட்டு நிலக்கரி எடுப்பதற்கான அறிவிப்பாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகாவில் உள்ள 11 இடங்களில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது, செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:- பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட தஞ்சையில் பழுப்பு நிலக்கரி எடுக்க தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது. திருவாரூர், தஞ்சை, மாவட்டங்களில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களுக்குள் வருவதால், நிலக்கரி எடுக்க அனுமதி இல்லை.

புதிய நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க ஒருபோதும் அனுமதிக்கப்பட மாட்டாது. நிலக்கரி சுரங்க விவகாரம் குறித்து நாளை சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம் அளிப்பார், எனக் கூறினார்.

  • Actor Sri Caught By Families இன்ஸ்டாகிராமில் நிர்வாண வீடியோ… முதல்முறையாக மகிழ்ச்சியை பகிர்ந்த நடிகர் ஸ்ரீ!