Body Shaming மட்டும் பண்றாங்க, யாருமே திறமையை பாக்கல.. -வீரசிம்ஹா ரெட்டி பட நடிகை ஆதங்கம்..!

Author: Vignesh
4 April 2023, 3:30 pm

மலையாளத்திலிருந்து விரல்விட்டு எண்ண முடியாத அளவுக்கு நடிகைகள் தமிழில் நடித்திருக்கின்றனர். அவர்களில் நயன்தாரா உள்பட பல நடிகைகள் உச்சத்துக்கும் சென்றிருக்கிறர்கள், ஒரு சில படங்களோடு காணாமல் போனவர்களும் உள்ளனர்.சிங்கம்புலி போன்ற ஒருசில படங்களில் நடித்தவர் ஹனிரோஸ்.

ஹனி ரோஸ் 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தமிழ் சினிமாவில் மீண்டும் நடித்துள்ளார் . பட்டாம்பூச்சி திரைப்படத்தில் ஒரு பெண் பத்திரிகையாளர் ஆக நடித்துள்ளார். அடக்க ஒடுக்கமான கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் சமீபகாலமாக கிளாமர் உடையில் வலம்வந்துகொண்டிருக்கிறார்.

அந்த வகையில் சமீபத்தில் மலையாள படமொன்றில் படு கிளாமரான காட்சியில் நடித்திருந்தார் நடிகை ஹனிரோஸ். தற்போது, தெலுங்கில் பாலகிருஷ்ணா ஜோடியாக வீர சிம்ஹா ரெட்டி படத்தில் ஹனி ரோஸ் நடித்து இருந்தார். அதற்க்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

honey rose - updatenews360

இதனிடையே, பொது இடங்களுக்கும், கடை திறப்பு விழாக்களுக்கும் வரும்போது தான் அணிந்து வரும் உடையை பார்த்து உருவ கேலி செய்து வருவதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

எந்த உடை அணிய வேண்டும் என்பது அவரவர் விருப்பம் என்றும், எடை கூடிவிட்டால் கேலி செய்கிறார்கள் எனவும், இது அதிகம் தன்னை வேதனைப்படுத்துகிறது எனவும் திறமையை மட்டும் பாருங்கள் என ஹனி ரோஸ் கூறி இருக்கிறார்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 568

    0

    0