சேத்தனை தியேட்டரிலேயே பளார்னு அறைஞ்ச பிரபல நடிகை..- விடுதலை படத்திற்கு வந்த ரியாக்ஷன்..!

Author: Vignesh
5 April 2023, 6:30 pm

தமிழ் சினிமா கண்டெடுத்த பொக்கிஷ நடிகர் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றதில் நடித்திருக்கும் படம் விடுதலை. வெற்றிமாறன் இயக்கியுள்ள இப்படத்தில் காமெடி நடிகர் சூரி ஹீரோவாக நடித்துள்ளார்.

பீரியட் க்ரைம் திரில்லர் கதையில் உருவாகியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ்ராஜ் , நடிகை பவானி ஸ்ரீ உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

viduthalai-updatenews360

சிறிய பட்ஜெட்டில் திட்டமிடப்பட்டிருந்த இந்த படம், கதை விவாதத்திற்குப் பின்னர் தொடர்ச்சியாக மெருகேற்றப்பட்டு 2 பாகங்கள் கொண்டதாக விரிவாக்கப்பட்டுள்ளது.

எதார்த்தமாக எடுக்கப்பட்டு வெற்றிப்பெற்று வரும் விடுதலை படம் குறித்து அதில் நடித்த பல நடிகர் நடிகைகள் ஷூட்டிங் அனுபவத்தையும் வெற்றிமாறன் இயக்கத்தை பற்றியும் தெரிவித்து வருகிறார்கள்.

viduthalai-updatenews360

அந்தவகையில் தற்போது, போலீசாக நெகடிவ் ரோலில் நடித்து இருக்கும் நடிகர் சேத்தனை பலரும் திட்டி வருகிறார்களாம். அதை அவரே பேட்டிகளில் தெரிவித்து வருகிறார்.

விடுதலை படத்தை தியேட்டரில் பார்த்துக்கொண்டிருக்கும் போதே சேத்தனின் மனைவி நடிகை தேவதர்ஷினி அடித்து விட்டதாகவும், மகளும் இன்னொரு பக்கம் திட்டியதாகவும் தெரிவித்து இருக்கிறார்.

viduthalai chetan-updatenews360

இப்படி ஒரு ரோலில் நடித்ததற்காக குடும்பத்தினருக்கே இவரை பார்த்து கோபம் வந்துவிட்டதாக பேட்டியில் சேத்தன் தெரிவித்து இருக்கிறார்.

  • Ajith reunite Again With Adhik அஜித்துடன் மீண்டும் கூட்டணி… உருவாகும் மார்க் ஆண்டனி 2.. ஆதிக் முடிவு!!
  • Views: - 541

    1

    1