26 வயதில் கோடீஸ்வரி ஆன ராஷ்மிகா… மொத்த சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

Author: Shree
5 April 2023, 5:11 pm

இந்திய சினிமாவின் கியூட்டான நடிகையாக கோடிக்கணக்கானான் ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்திருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி என்ற படத்தில் நடித்து திரைத்துறைக்கு அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து சூப்பர் ஹிட் நடிகையானார்.

தமிழில் விஜய்யின் வாரிசு படத்தில் கடைசியாக நடித்திருந்தார். தொடர்ந்து தமிழ் , தெலுங்கு சினிமாவில் நடித்து வருகிறார். இந்நிலையில் ராஷ்மிகாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் சமூகவலைத்தளங்களில் வெளியாகி எல்லோரையும் வாய் பிளக்கவைத்துள்ளது.

குறைந்த பட்சம் ஒரு படத்திற்கு மட்டும் ரூ.4 கோடி வரை சம்பளம் வாங்கும் ராஷ்மிகா விளம்பர படங்களுக்கு இதை விட டபுள் மடங்காக சம்பளம் வாங்குகிறாராம். இதுதவிர மும்பையில் அண்மையில் பிரம்மாண்ட பங்களா ஒன்றையும் சொந்தமாக வாங்கினார். பெங்களூரில் ரூ. 8 லட்சம் மதிப்புள்ள மேன்சன் ஒன்றை நடத்தி வருமானம் சம்பாதித்து வருகிறார்.

மேலும், விலையுயர்ந்த கார்கள் மீது அதிகம் மோகம் கொண்ட ராஷ்மிகா, ரூ.50 லட்சம் மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ், ரூ.40 லட்சம் மதிப்புள்ள ஆடி Q3, டொயோட்டா இன்னோவா மற்றும் ஹுண்டாய் கிரிட்டா போன்ற கார்கள் வைத்துள்ளார்.

ஆக ரஷ்மிகாவின் மொத்த சொத்து மதிப்பு 8 மில்லியன் டாலர் என கூறப்படுகிறது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.65 கோடி. இவரது மாத வருவாய் மட்டும் ரூ.60 லட்சமாம். பெரிய நட்சத்திர ஹீரோவுக்கு நிகராக இவ்வளவு இளம் வயதிலேயே இத்தனை கோடி சொத்துக்காரியா ராஷ்மிகா? என ரசிகர்கள் வாய்ப்பிளந்துவிட்டனர்.

  • rashmika mandanna first horror movie thama is vampire movie இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?