நீரிழிவு நோயாளிகளுக்கு எலுமிச்சை பானங்கள் ஏற்றதா???
Author: Hemalatha Ramkumar6 April 2023, 10:33 am
நீங்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், அடிக்கடி சர்க்கரை அளவுகளில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை கட்டுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து நீங்கள் தெரிந்து வைத்திருப்பது அவசியம். அந்த வகையில் சிட்ரஸ் பழங்கள் உங்களுக்கு உதவக்கூடும். சிட்ரஸ் பழங்களில் காணப்படும் ஏராளமான கரையக்கூடிய நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி ஆகியவை காரணமாக எலுமிச்சை உங்களுக்கேற்றது. எலுமிச்சை சாறு எவ்வாறு அதிகப்படியான இரத்த குளுக்கோஸ் அளவை எப்படி கணிசமாகக் குறைக்கும் என்பதை சமீபத்திய ஆய்வு ஒன்று நிரூபிக்கிறது.
எலுமிச்சை நீண்ட காலமாக அமெரிக்க நீரிழிவு சங்கத்தால் நீரிழிவு நோய்க்கான சூப்பர்ஃபுட் என்று கருதப்படுகிறது. இது குறைந்த ஜிஐ (கிளைசெமிக் இண்டெக்ஸ்) உணவாகும். மேலும் உங்கள் உணவில் எலுமிச்சையை சரியான முறையில் சேர்த்துக் கொண்டால், வீக்கத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பதோடு, சாப்பிட்ட பிறகு ஏற்படும் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கவும் இது உதவும்.
உங்கள் தினசரி உணவில் தேவையான ஆரோக்கியமான உணவுகளைச் சேர்ப்பது மிகவும் முக்கியம். எலுமிச்சை சாறு உங்கள் ஒழுங்கற்ற இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் மற்றும் நீரிழிவு நோய்க்கான சிறந்த மீட்பராக செயல்படும் ஒரு சக்திவாய்ந்த மருந்து.
நீரிழிவு நோயாளிகளுக்கு எலுமிச்சை ஏன் சரியான உணவு?
எலுமிச்சை வைட்டமின் சி, நார்ச்சத்து, அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் மற்றும் அதன் குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் காரணமாக இரத்த சர்க்கரை அளவை கணிசமாகக் குறைக்க உதவுகிறது. மேலும், எலுமிச்சையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சிறந்த வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகின்றன.
எலுமிச்சை சாற்றில் கலோரிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் சாப்பிடுவதற்கு ஏற்றது. எலுமிச்சை சாற்றில் உள்ள வைட்டமின் சி இன்சுலின் அளவையும் கட்டுப்படுத்துகிறது. எலுமிச்சையில் எளிதான நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் ஏற்ற இறக்கமான இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கிறது.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.